சத்ரு

இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். சங்கீதம் இருபத்தி ஐந்து இரண்டில், என் தேவனே! உம்மை நம்பி இருக்கிறேன். நான் வெட்கப்பட்டு போகாதபடிக்கு செய்யும். என் சத்ருக்கள் என்னை மேற்கொண்டு என்னை மகிழவிடாதேயும். என்று ஆண்டவரிடத்திலே ஒரு பெரிய விண்ணப்பத்தை வைக்கிறான். நான் உம்மை நம்பி இருக்கிறேன்.

நான் உமது பேரிலே பற்றுதலாக இருக்கிறேன். நீர் எனக்கு உதவி செய்வீர், நீர் எனக்கு இரக்கம் பாராட்டுவீர் என்று சொல்லி நான் உம்மை நோக்கி நம்பிக்கொண்டிருக்கிறேன். நான் வெட்கப்பட்டு போகாதபடி செய்யும். என்னுடைய நம்பிக்கை அல்லது என்னுடைய ஜெபங்கள் கேட்கப்படுகிற பொழுது உம்முடைய நன்மையான கரத்தை நீட்டி நீர் ஆசிர்வதிக்கிற பொழுது, நான் சந்தோஷப்படுவேன். சத்ரு வெட்கப்பட்டு போவான். ஆண்டவரே நீர் நன்மை செய்கிறவர். உம்மை நோக்கி கூப்பிடுகிற யாவருக்கும் கிருபை பாராட்கிறவர். ஆகவே எனக்கு வேண்டிய நன்மைகளை தந்து என்னை தேற்றுவீராக. திடப்படுத்தி தைரியப்படுத்துவீராக என்று சொல்லி அவன் மன்றாடுகிறான்.

என் சத்ருக்கள் என்னை மேற்கொண்டு மகிழவிடாதேயும். நான் ஜெயம் பெற வேண்டும், சத்ருக்கள் அல்ல. சத்ருக்கள் வெட்கப்பட்டு போக செய்வீராக. அவர்கள் ஆண்டவரே தம்முடைய பொல்லாத நினைவுகளிலே விழுந்து போவார்களாக. தீமையான காரியங்களை நினைக்கிற யோசிக்கிற உமக்கு விரோதமாக நடைந்தேற வேண்டும் என்று சொல்லி வேண்டிக் கொள்கிற அவருடைய காரியங்களை நீர் வதம் பண்ணி போடுவீராக. அவர்களை வாக்கியாதே போகப் பண்ணுவீர்களாக.

ஆண்டவரே! அடியேனுடைய குரலுக்கு செவிசாய்த்து நன்மை செய்து என்னை ஆசிர்வதிப்பீராக. என்னை தேற்றுவீராக. இதை போன்ற ஆபத்தானே சூழ்நிலைகளிலும் நெருக்கமான சூழ்நிலைகளிலும் காணப்படுகிற எந்தவொரு சகோதருனுக்கும் சகோதரிக்கும் நீர் இரக்கம் பாராட்டி அவர்களுடைய ஜெபத்தை கேட்டு அவர்களுக்கு வேண்டிய நன்மைகளை கொடுத்தருளி அவர்களை ஆசிர்வதிப்பீராக. கிருபையுடைய கர்த்தர் எங்கள் ஒவ்வொருவரின் ஜெபத்திற்கும் பதில் தருவீராக. நீரே எனக்கு போதுமானவராய் இருந்தருளும். பெரிய காரியங்களை செய்யும். எங்களை சந்தோஷப்படுத்தும். நாங்கள் வெட்கப்பட்டு போகாதபடிக்கு எங்களை சந்தோஷப்படுத்துவீராக. கிருபையினால் தாங்கும் ஏசு கிறிஸ்து மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென். ஆமென்.

ஆசிரியர்: போதகர் தேவசகாயம்

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com