சட்டையின் நிழல்
இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை நாம் தியானிக்கப் போகிறோம். சங்கீதங்களின் புஸ்தகம் பதினேழு எட்டு ஒன்பதிலே இந்த ஜெபத்தை பார்க்கிறோம். கண்மணியை போல எம்மை காத்தருளும். என்னை ஒடுக்குகிற துன்மார்க்கர்களுக்கும் என்னை சூழ்ந்து கொள்கிற என் பிராணபகைஞர்க்கும் மறைவாக உம்முடைய சட்டைகளின் நிழலிலே என்னை காப்பாற்றும். கண்மணியைப் போல என்னை காத்தருளும். உம்முடைய சட்டைகளின் நிழலிலே என்னை காப்பாற்றும் என்று சொல்லி ஆண்டவருடைய உதவிக்காக மன்றாடுகிறான்.
ஆண்டவருடைய பலத்த கரத்தின் உதவிக்காக ஆதரவுக்காக கர்த்தரை நோக்கி மன்றாடுகிறான். ஏனென்றால் பகைஞர்கள் சூழ்ச்சி பண்ணுகிறவர்கள் எல்லாவிதமான வம்பு தும்புகள் எல்லாவற்றையும் செய்யகூடியதான கிரியைகள் உடைய மக்களுடைய கைகளுக்கு என்னை விலக்கி காப்பாற்ற வேண்டும். நீர் எமக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் மன்றாடுகின்றான். ஏனென்றால் நம்முடைய ஆண்டவர் நமக்கு உதவி செய்வார். ஆபத்திலே நாம் கூப்பிடுகிற பொழுது அவர் நமக்கு உதவி செய்வார். அவர் நமக்கு செவிசாய்த்து உதவிகளை கட்டளையிட்டு நம்மை தேற்றுவார், திடப்படுத்துவார், தைரியப்படுத்துவார், சந்தோஷப்படுத்துவார். எதிராளிகள் எல்லாரையும் நம்மைவிட்டு துரத்துவார்.
நமக்கு விரோதமாக ஒரு வழியாய் வருவார்கள், எழு வழியாய் ஓடி போவார்கள் என்று சொன்ன ஆண்டவர், தம்முடைய தூதர்களால் எதிராளிகளை விரட்டுவார். கர்த்தர் நம்முடைய வாழ்க்கையிலே அவ்வளவு பெரிய காரியங்களை செய்யவல்லவர். அவர் என்றும் ஜுவிக்கிறவர், என்றும் நம்முடைய ஜெபத்திற்கு பதில் கொடுக்கிறவர். ஆபத்திலே நாம் வேண்டிக்கொள்கிற பொழுது நமக்கு எல்லா உதவிகளையும் கட்டளையிடுவார்.
இரக்கமுள்ள ஆண்டவரே! இந்நாளிலே இந்த ஜெபத்திலே பங்கு கொள்கிற ஒவ்வொருவருடைய சூழ்நிலையையும் அறிந்திருக்கிறீர். அவர்களுடைய நெருக்கங்களை அறிந்து இருக்கிறீர். உறவினர்களால், தெரிந்தவர்களால், நண்பர்களால், வஞ்சகமாக செயல்படுகிறவர்களால், சூழ்ச்சிகளால் பல தந்திரமான காரியங்களை செய்து எங்களை மேற்கொள்ள வேண்டும் என்று சொல்லி கிரியை செய்கிற ஒவ்வொருவடைய காரியங்களை நீர் வதம் பண்ணி போடுவீராக. உம்முடைய சட்டைகளின் நிழலிலே வைத்து எம்மை காத்து கொள்வீராக. கண்ணின் மணியை போல எங்களை காத்து கொள்வீராக. நீர் எங்களுக்கு போதுமானவராய் இருந்தருளும். இந்த ஜெபத்திலே பங்கு பெற்று மகிமைப்படுத்திகொண்டிருக்கிற ஒவ்வொரு பிள்ளைகளையும் நீர் ஆசிர்வதித்து அருளும். பெரிய காரியங்களை செய்யும் ஏசுவின் மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென். ஆமென்.
ஆசிரியர்: போதகர் தேவசகாயம்