சகோதரத்துவம்
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. கர்த்தர் நமக்கு இந்த ஜெபத்தை ஆசிர்வதித்து கொடுப்பாராக!
இந்த நாளின் ஜெபத்தை சாலமேன் ராஜாவாகிய மெல்கிசுதேக்கு ஏறேடுக்கிறதை நாம் பார்க்கிறோம். ஆதியாகமம் புஸ்தகம் பதினாங்காம் அதிகாரம் பத்தொன்பதாம் வசனத்திலே உன்னதமான தேவனுடைய ஆசிர்வாதம் ஆபிரகாமிற்கு உண்டாவதாக என்று சொல்வதை நாம் பார்க்கிறோம். வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனுடைய ஆசிர்வாதம் ஆபிரகாமிற்கு உண்டாவதாக. இந்த ஜெபத்தை சாலமேன் ராஜாவாகிய மெல்கிசுதேக்கு ஆபிரகாமிற்காக எழுதினது. எந்த சூழ்நிலையில் என்று சொன்னால், ஆபிரகாமுடைய குடும்பத்தையும் அவனுடைய வேலைகாரர்களையும் விட்டு காணாதேசத்தில் செழிப்பான பகுதியை தெரிந்துக்கொண்டு லோத்து சோதோம்குமாரபட்டனத்திலே குடியேருகிறான். அங்கே அவர்கள் வாழ்ந்து வருகிற காலகட்டத்திலே சோதோம்பட்டனத்தின்பேரிலே எதிரி ராஜாக்கள் வந்து படையெடுத்து சோதோம்பட்டனத்தை கொள்ளையடித்து லோத்துவையும் அவருடைய மனைவி பிள்ளைகளையும் அவர்களுடைய ஆடு, மாடு எல்லாவற்றையும் சிறைபிடித்துக் கொண்டு போய்விட்டார்கள். இதைக் கேள்விப்பட்ட ஆபிரகாம் தன் சகோதரனுடைய குமாரானாகிய லோத்துவுக்காக, உதவிசெய்ய முன் வந்து தன் வீட்டு வேலைக்காரர்களை 118 பேரை ஆயுதம் திரப்பித்து அவர்களோடுகூட தொடர்ந்து சென்று அங்கே அவர்களை ஜெயித்து வெற்றி சுரந்து எல்லாவற்றையும் திருப்பி கொண்டு வருகிறான்.
தன் சகோதரனுக்காக இந்த காரியங்களை செய்த, கர்த்தர் அவனை ஆசிர்வதிக்கிறார். அப்பொழுதுதான் இந்த வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனுடைய ஆசிர்வாதம் ஆபிரகாமிற்கு உண்டாவதாக என்று மெல்கிசுதேக்கு ராஜா சொல்கிறதை நாம் பார்க்கிறோம். ஆபத்திலே உதவுவதற்காகதான் சகோதரன் பிறந்திருக்கிறான். ஆகவே நாமும் உதவி செய்வோம். அவனுடைய குடும்பத்தில் உள்ள மக்களை நினைவுக்கூறுவோம். அவர்களுடைய நெருக்கங்களிலே நாம் அவர்களுக்கு உதவி செய்து நாம் அனுசரனையாக இருப்போம். கர்த்தருடைய ஆசிர்வாதம் நமக்கு கிடைக்கும்.
கர்த்தாவே! இவ்வேளையிலே நாங்கள் உன்னை ஸ்தோத்திக்குறோம். இச்ஜெபத்தின் மூலமாக எங்களுக்கு நன்மை தாரும். சகோதர ஸ்நேகத்தை நாங்கள் கட்டி காக்க உதவி செய்யும். பிதாவாகிய தேவனுடைய திருவுள்ள சித்தத்தின்படி சகோதரர்கள் உறவினர்கள் இடையே நாங்கள் அன்போடு ஐக்கியத்தோடு வாழ்ந்து உன்னுடைய நாமத்தை மகிமைப்படுத்த அருள்செய்வீராக. இந்த ஜெபத்தை ஏறெடுக்கிற ஒவ்வொரு பிள்ளைகளுடைய வாழ்க்கையிலும் பெரிய காரியங்களை செய்வீராக. ஏசுகிருஸ்த்துவின் மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே! ஆமென். ஆமென்.