கேடகம்
இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை தியானிக்க போகிறோம். சஞ்சீதங்களின் புஸ்தகம் மூன்றாம் அதிகாரம் மூன்றாம் வசனத்திலே இந்த ஜெபத்தை பார்க்கிறோம். கர்த்தாவே! நீர் என் கேடகமும் மகிமையும் என் தலையை உயர்த்துகிறவருமாய் இருக்கிறீர். தாவீது ராஜா எத்தனையோ ஜெபங்களை ஏறெடுத்து இருக்கிறார். தன் நிலைகளின் சஞ்சீதங்கள் எல்லாம் ஜெபங்களாகவே அமைத்து கொடுத்து இருக்கிறார். இவைகளெல்லாம் நம் இருதயத்துக்கு மகிழ்ச்சியை சந்தோஷத்தை கொடுக்கிறது. அவனுடைய வார்த்தைகள் எங்களை தேற்றுகிறது.
கர்த்தாவே! நீர் என் கேடகமும் மகிமையுமாய் இருக்கிறீர் என்று சொல்கிறான். ஆண்டவர் பராக்கிரமசாலி, ஆண்டவர் சர்வ வல்லமையுள்ள தேவன். அவர் செய்ய நினைத்தது தடைபடாது. அந்த கர்த்தர் என் கேடயமாக இருக்கிறீர். எனக்கு பாதுகாப்பான ஆயுதமாக இருக்கிறீர். எனக்கு மறைவிடமாக இருக்கிறீர். தீமை நடக்காதபடி சத்ருக்கள் என்னை தீண்டாதபடி உம்முடைய கேடயத்தினால் எம்மை மறைத்து காத்து கொள்கிறீர் என்று சொல்லி ஆண்டவரை ஜெபிக்கிறான். மேலுமாக என்னை மகிமைப்படுத்துகிறவரும் அவரே. எளிமையும் வலிமையுமான என்னை தேற்றி கணப்படுத்தி மேன்மைப்படுத்தி ஆசிர்வதிக்கிற தேவனாக இருக்கிறீர் என்று சொல்கிறான்.
என் தலையை உயர்த்துகிறவறாய் இருக்கிறீர். சத்ருக்களுக்கு முன்பாக எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி என் தலையை எண்ணெயால் அபிஷேகம் பண்ணுகிறீர் என்று சொன்னபடியாக, கர்த்தாவே தாவீதை உயர்த்தினீர். ஈசாயின் குமாரனை நீர் உயர்த்தினீர் மேன்மைப்படுத்துனீர். நீர் அபிஷேகம் பண்ணுனீர். உம்முடைய காரியமாக எடுத்து பயன்படுத்துனீர். கர்த்தாவே! நீர் ஒவ்வொருவருக்கும் வேண்டிய நன்மைகளை தந்தருளுவீராக. இந்த ஜெபத்தை தியானித்து கொண்டிருக்கிற ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் வேண்டிய கிருபைகளை நீர் கொடுப்பீராக. அவர்கள் எவற்றையெல்லாம் உம்மிடத்திலே கேட்கிறார்களோ அவை எல்லாவற்றையும் நீரே கொடுப்பீராக.
இரக்கமுள்ள ஆண்டவரே! நாங்கள் உம்மை நோக்கி பார்க்கிறோம். நீர் எங்களுக்கு கேடகமாக, நீர் எங்களுக்கு கண்மலையாக, நீர் எங்களுக்கு பாதுகாப்பாக இருப்பீராக. எந்த தீங்கும் எந்த நாசமோசமும் சத்ருக்களுடைய எந்த காரியமும் எங்கள் பேரிலே வராதபடி நீர் தடுத்து ஆட்கொள்வீராக. உம்முடைய நிழலிலே வைத்து காத்துகொள்வீராக. கர்த்தர் எல்லாவற்றிலும் இருந்து விலக்கிக் காப்பார். அவர் என் ஆத்மாவைக் காப்பார் என்று சொன்னபடியாக கூடவே இருந்து தப்பித்துகொள்ளும்.
நீர் உம்முடைய பிள்ளைகளை உயர்த்தி கணப்படுத்தி மேன்மைப்படுத்தி ஆசிர்வதியும். நீர் அவர்களுக்கு போதுமானவராக இருப்பீராக. இந்த ஜெபத்தை தியானிக்கக்கூடிய ஒவ்வொருவருக்கும் சகல சமாதானத்தையும் சந்தோஷத்தையும் கர்த்தர்தாமே தந்தருளுவாராக. ஏசு கிறிஸ்து மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென். ஆமென்.
ஆசிரியர்: போதகர் தேவசகாயம்