கூடங்குளத்தில் அணுக்கழிவுகள் என்ன செய்யப்படுகின்றன? | Supreme court questions officials at Koodankulam nuclear power plant!
கூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, உச்சநீதிமன்றம் ஒரு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவில், வரும் ஜூலை மாதம் முதல் வாரத்திற்குள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என கூடங்குளம் நிர்வாகத்திற்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
இந்த உத்தரவில், கூடங்குளத்தில் அணுக்கழிவுகள் என்ன செய்யப்படுகின்றன என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் இந்த உத்தரவில், அணுக்கழிவுகள் எப்படி வெளியேற்றப்படுகின்றன என்பது பற்றியும், கழிவுகள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்பது பற்றியும் ஒரு அறிக்கையில் விவரிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அணுமின் நிலைய கழிவுகள் வெளியேற்றப்படுவதால் அந்த பகுதியில் வாழும் மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர் என்று தொடுக்கப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, உச்சநீதிமன்றம் 2 முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
உச்சநீதிமன்றம் அறிவித்த 2 முக்கிய அறிவுறுத்தல்கள்:
1. அணுக்களிவுகள் சரியாக பரமரிக்கப்படுக்கிறதா? எந்த முறையில் அணுக்கழிவுகள் பராமரிக்கப்படுகிறது?
2. அப்படி பராமரிக்கப்படும் அணுக்கழிவுகள் முறையாக சுத்திகரிக்கப்பட்டு பாதுகாப்பாக வெளியேற்றப்படுகிறதா?
இந்நிலையில், கூடங்குளத்தில் பொது மக்கள், அணுசக்தி கழிவுகள் அங்குள்ள நீர் நிலைகளில் கலப்பதாகவும், நிலத்தடி நீர் மட்டம் குறைவதாகவும் குற்றம் சாட்டிவருகின்றனர்.