குற்றங்குறை

இன்றைய நாளில் யோபுவின் ஜெபத்தை தியானிக்க போகிறோம். யோபு பத்தாம் அதிகாரம் ஐந்தாவது, ஆறாவது வசனத்திலே இந்த ஜெபத்தை காண்கிறோம். நீர் எம் அக்கிரமத்தை கிண்டி கிளப்பி என் பாவத்தை ஆராய்ந்து விசாரிக்கிறதற்கு உம்முடைய நாட்கள் ஒரு மனுஷனுடைய நாட்கள் போலவும், உம்முடைய வருஷங்கள் ஒரு புருஷனுடைய ஜீவ காலம் போலவும் இருக்கிறதோ என்று சொல்லி யோபு கர்த்தரிடத்திலே கேட்கிறான்.

பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து ஏசு உலகத்திற்கு வந்திருக்கிறார். மணமக்களை இரட்சிப்பதற்காகதானே பாவத்திலிருந்தும் அக்கிரமத்திலிருந்தும் பொல்லாத கிரியைகளில் இருந்தும் அவர்களை விடுவிப்பதற்காகதானே தேவனாகிய ஆண்டவர் குமாரனாகிய கிறிஸ்துவை பூமிக்கு அனுப்பி இருக்கிறார். அப்படி இருக்கிறபொழுது நீர் என்னை விசாரிக்கிறீரே. கடந்த நாட்களில் என் வாழ்க்கையில் காணப்பட்ட குற்றங்கள் குறைகளை தேடி கண்டுபிடித்து அதை கிண்டி கிளறி என்னை நீர் அறிந்து இருக்கப்போகிறீரோ. உம்முடைய கிருபைகளை நீர் கட்டளையிடமாட்டீரா. ஒரு மனுஷன் இன்னொரு மனுஷன் பேரிலே குற்றம் காண்பதற்காக குறை சொல்வதற்காக அவனுடைய வாழ்க்கையிலே ஏதாகிலும் இருக்கிறதா என்று சொல்லி தேடி பார்த்து கொண்டே இருப்பான். அவன் மனுஷன். மனுஷன் இன்னொருவன் பேரிலே குற்றம் கண்டுபிடிப்பதற்காக பிரயாசப்படுகிறான். ஆனால் நீர் இரக்கமுள்ள ஆண்டவர் ஆயிற்றே. நீர் மன்னிக்கிறவர் ஆயிற்றே. பாவிகளுக்காக சிலுவையிலே அறையப்பட்டீரே.

உம்முடைய இரத்தத்தை காண்பிக்கமாட்டீரா? ஒரு சாதாரண மனுஷனுடைய காலத்தை போலவா உம்முடைய காலம் இருக்கிறது. நித்தம் நித்த காலமாக ஜீவிக்கிற தேவாதி தேவன் நீர் படைத்த உம்முடைய மணக்கோலத்தின் பேரிலே விஷேஷமாக அடியான் பேரிலே நீர் இரக்கம் பாராட்டுவீராக. கிருபை செய்வீராக. மன்னிப்பீராக.

இரக்கமுள்ள ஆண்டவரே! நாங்கள் உம்மை நோக்கி மன்றாடுகிற பொழுது நீர் எம்முடைய வாழ்க்கையிலே நடக்கிற குற்றங்குறைகளை மன்னிக்கிறவரும், நீர் எங்களை இரட்சிக்கிறவரும், நீங்கள் விடுவிக்கிறவருமாக இருக்கிறீர் அதற்காக உம்மை ஸ்த்தோத்திரிக்கிறோம். உம்முடைய தயையுள்ள கரம் எங்களோடுகூட இருப்பதாக. எங்களுக்கு ஒரு வெளிச்சத்தை தாரும். நம்பிக்கையை தாரும். ஒரு ஆறுதலை கட்டளையிடும். சமாதானத்தை சந்தோஷத்தை தாரும். நீர் எங்களோடு கூட இருப்பீராக. இதேபோன்று பல குழப்பங்களோடு சந்தேகங்களோடு கூட இருக்கிற உம்முடைய பிள்ளைகளுடைய ஜெபத்திற்கு நீர் பதில் கொடுத்து எங்களை ஆசிர்வதிக்க வேண்டுமாய் நாங்கள் ஜெபிக்கிறோம். நீரே எங்களுக்கு போதுமானவராக இருப்பீராக. ஏசு கிறிஸ்து மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென். ஆமென்.

ஆசிரியர்: போதகர் தேவசகாயம்

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com