குற்றங்கள்

இந்த நாளில் வேத பாலகனாகிய எஸ்ராவின் ஜெபத்தை தியானிக்க போகிறோம். எஸ்ராவின் புஸ்தகம் ஒன்பதாம் அதிகாரம் ஆறாவது வசனத்திலே என் தேவனே, நான் என் முகத்தை என் தேவனாகிய உமக்கு முன்பாக ஏறெடுக்க வெட்கி கலங்குகிறேன். எங்கள் அக்கிரமங்கள் எங்கள் தலைக்கு மேலாக பெருகிற்று.

எங்கள் குற்றமும் வானமின்றும் போயிற்று என்று சொல்லி ஒரு மன்றாட ஜெபத்தை ஏறெடுக்கிறதை நாம் பார்க்கிறோம். கோரேசு ராஜாவின் நாட்களில் எரிசலேமின் தேவலாயத்தை கட்டுவதற்காக வேத பாலகனாகிய எஸ்ராவின் தலைமையிலே யூதர்கள் உற்சாகமடைந்து எரிசலேமுக்கு நேராக வருகிறார்கள். ஆலயப்பணிக்காக அவர்கள் பொருள் கொடுக்கிறார்கள். உதவி செய்கின்றார்கள். வேலை செய்கின்றார்கள். எல்லா கிரியைகளும் நடப்பித்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் சமுதாய வாழ்க்கையிலே அவர்கள் பின்மாற்றமான கிரியைகளை செய்கின்றார்கள். அந்த நாட்களிலே அங்கே வாழ்ந்து வந்த ஏத்தியர், எமோரியர், கிரிகாசியர், எபூசியர், கானானியர் போன்றதான அந்நிய மக்களுடைய குடும்பங்களிலே பெண்களை தங்களுக்கென்று எடுத்து கொண்டு தங்களுடைய பிள்ளைகளுக்கென்று கொடுத்து இவ்விதமாக அந்நிய வழிபாட்டுக்கு நேராக கடந்து சென்றுவிடுகின்றார்கள்.

பிரஜாதியாரின் மார்க்கத்தையும் அவர்கள் கடைப்பிடிக்க முற்படுகிறார்கள். இந்த காரியங்கள் எஸ்ராவின் கண்களுக்கு தெரிந்தபொழுது துக்கப்பட்டு பாரபட்டு ஜெபிக்கிறதை நாம் பார்க்கிறோம். என் தேவனே! கிருபையுள்ள உம் முகத்திற்கு நேராக என் முகத்தை ஏறெடுக்க நான் வெட்கப்படுகிறேன். எங்கள் அக்கிரமங்கள் எங்கள் தலைக்கு மேலாக உயர்ந்திருக்கிறது. தேசத்து ஜனங்கள் எல்லாம் இஸ்ரவேலின் ஜனங்கள் எல்லாரும் இந்த அந்நிய வழிபாடுகளினாலே தங்களை கறைப்படுத்தி கொண்டிருக்கிறார்களே! எங்களுடைய கிரியைகள் அக்கிரம கிரியைகள் வானம் வரையும் எட்டி போய் இருக்கிறதே! எங்களுக்கு இரக்கம் பாராட்ட வேண்டும் என்று சொல்லி மன்றாடி ஜெபிக்கிறதை நாம் பார்க்கிறோம்.

கர்த்தருடைய பிள்ளைகளே! நாம் உற்சாகமாக பொருள் உதவியோ பண உதவியோ கையின் கிரியைகளையோ ஆண்டவருடைய பணிக்கென்று நாம் கொடுத்த போதிலும் நம்முடைய வாழ்வு ஆண்டவருக்கு பிரியமாக இருக்க வேண்டும். நம்முடைய ஆவியிலும் ஆத்மாவிலும் சரீரத்திலும் ஆண்டவரை நாம் மகிமைப்படுத்த வேண்டும். கணப்படுத்த வேண்டும். அவருடைய கிருபை நம்மைத் தாங்க வேண்டும்.

இரக்கமுள்ள ஆண்டவரே! இந்த ஜெபத்தை தியானிக்கிற எங்களுக்கு நீர் அருள் செய்வீராக. நாங்கள் உம்மை பிரியப்படுத்தும்படியாக வாழ வேண்டும் கர்த்தாவே! எம்முடைய ஜீவியத்தை நீர் பார்க்கிறீர். நான் பரிசுத்தராய் இருக்கிறதை போன்று நீங்களும் பரிசுத்தராய் இருங்கள் என்று சொன்னீரே. அந்த வார்த்தையை நாங்கள் செவி சாய்த்து கேட்டு நாங்களும் வாழ்ந்து கறைதுறைகளுக்கு நாங்கள் விலகி ஜீவித்து உம்மை மகிமைப்படுத்த நீர் அருள் செய்ய வேண்டுமாய் வேண்டுகிறோம். நீரே எங்களுக்கு போதுமானவராக இருப்பீராக. இந்த ஜெபத்தை தியானிக்கிற ஒவ்வொரு மக்களையும் நீர் ஆசிர்வரிப்பீராக. ஏசுவின் மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென். ஆமென்.

ஆசிரியர்: போதகர் தேவசகாயம்

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com