குகைகளிலிருந்து 4 தாய்லாந்து சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளார்! மீதமுள்ள சிறுவர்களை மீட்க மேலும் 4 நாட்கள் ஆகலாம்!
குகைகளில் சிக்கிய 12 தாய்லந்து சிறுவர்களில் நான்கு பேர் மீட்கப்பட்டுள்ளார் என்று தாய்லாந்து கடற்படை SEALS அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நான்கு சிறுவர்களைப் காப்பாற்றியப் பிறகு, ஆக்ஸிஜன் போன்ற முக்கிய மீட்பு பணி ஆதாரங்கள் குறைந்ததால், தற்காலிகமாக மீட்பு பணிகளை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மீதமுள்ள எட்டு சிறுவர்கள் மற்றும் அவர்களது கால்பந்து பயிற்சியாளரை காப்பாற்ற, மேலும் நான்கு நாட்கள் வரை ஆகக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதிகாலை ஞாயிற்றுக்கிழமை அன்று, சில டைவர்கள் (முக்குளிப்பவர்) குழந்தைகள் மற்றும் அவர்களது கால்பந்து பயிற்சியாளரை தம லுவாங் குகைகளிலிருந்து மீட்க பணிகளை தொடங்கினர். இதுவரை நான்கு குழந்தைகளை மீட்டெடுத்துள்ளனர். இரண்டு வாரங்களுக்கும் மேலாக குகைகளில் சிக்கிய குழந்தைகளை மீட்க, மேலும் எவ்வளவு நாட்கள் ஆகும் என்று நிச்சயமாக தெரியாவிட்டாலும், குறைந்தபட்சம் நான்கு நாட்கள் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தாய்லாந்தின் 5 கடற்படை SEAL டைவர்களும், பதிமூன்று வெளிநாட்டு டைவர்களும் மற்ற சிறுவர்களை மீட்க முயற்சி எடுத்து வருகின்றனர். சியாங் ராய் மாகாணத்தில் தற்காலிக ஆளுநர் நரோங்சக் ஒசதனகோர்ன் இந்த மீட்பு நடவடிக்கைகளை கவனித்து வருகிறார்.