கீழ்படிதல்
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. இந்த ஜெபத்தை சாமுவேல் ஏழிடம் இருந்து கற்றுக்கொண்ட ஜெபம். ஒன்று சாமுவேல் மூன்றாம் அதிகாரம் ஒன்பதாவது வசனத்திலே கர்த்தாவே! சொல்லும் அடியேன் கேட்கிறேன், கர்த்தாவே! சொல்லும் அடியேன் கேட்கிறேன் என்ற ஜெபத்தை ஏழி சிறுவனாகிய சாமுவேலுக்கு கற்றுக்கொடுக்கிறதை நாம் பார்க்கிறோம்.
எல்கானாவும் அன்னாளும் கர்த்தர் தங்களுக்கு கொடுத்த குமாரனாகிய சாமுவேலை தாங்கள் ஆண்டவரோடு கூட போர்த்தனை பண்ணிக்கொண்டதின் படியாக, சிறுவனாகிய சாமுவேலை சிலோவில் இருக்கிற தேவாலயத்திலே பணி செய்வதற்காக ஆசாரியனாகிய ஏழியினிடத்திலே கொண்டு வந்து ஒப்படைக்கின்றார்கள். ஏழியும் சாமுவேலை ஏற்றுக்கொண்டு அவனுக்கு பல காரியங்களைக் கற்றுக் கொடுத்து ஆலயத்தின் பணிகளிலே பயன்படுத்தி வருகிறதை நாம் பார்க்கிறோம்.
ஏழிக்கு எல்லா வகைகளிலும் உதவிகள் எல்லாவற்றையும் சாமுவேல் நேர்த்தியாக செய்து வந்தான். ஆனால், சிறுவனாகிய சாமுவேலுக்கு ஜெபிக்கத் தெரியவில்லை. ஏழியும் சாமுவேலும் கர்த்தருடைய ஆலயத்திலேதான் தங்கியிருக்கிறார்கள். ஒரு நாளிலே கர்த்தர் சாமுவேலை சந்திக்க அவனை நோக்கி கூப்பிடுகிறார். சாமுவேலே! சாமுவேலே! என்று சொல்லி கூப்பிடுகிறார். ஏழி தான் தன்னை கூப்பிடுகிறார் என்று சொல்லி நினைத்து சாமுவேல் ஏழியிடம் சென்று கேட்கிறான். நீர் என்னை கூப்பிட்டீரே! என்று சொல்லி, இல்லை என்றுகிறான். இரண்டாவது தடவையும் சாமுவேலே என்று கர்த்தர் கூப்பிடுகிறார். நீ போய் படுத்துக்கொள் நான் உன்னை கூப்பிடவில்லை என்று சொல்லுகிறான். மூன்றாவது தடவை சொல்லுகிறபொழுது கர்த்தர் அவனை சந்திக்கிறப்பொழுது, சாமுவேலே! சாமுவேலே! என்று சொல்லி கூப்பிடுகிறார். அன்று கற்றுக்கொண்ட ஜெபத்தை ஆண்டவரிடத்திலே ஒப்புவிக்கிறான். கர்த்தாவே சொல்லும், அடியேன் கேட்கிறேன். அன்று முதல் தன்னுடைய ஜீவகால முழுவதும் சாமுவேல் கர்த்தரிடத்தே கேட்கிறவனாக, கர்த்தர் சொல்லுகிறவைகளை செய்கிறவனாக, ஆண்டவருக்கு மகிமை செலுத்துகிறவனாக காணப்பட்டான். கர்த்தர் அவனை வழி நடத்தினார்.
கர்த்தாவே! நாங்கள் உம்மை ஸ்தோத்திக்கிறோம். கர்த்தாவே சொல்லும் அடியேன் கேட்கிறேன் என்று சொன்ன இந்த ஜெபத்தை எங்களுக்கும் தாரும் நாங்களும் நாங்கள் அதை அத்தியாசப்படுத்தட்டும் எல்லாக்காரியங்களிலும் நாங்கள் கீழ்படிந்து செவிசாய்த்து கேட்டு உம்முடைய நாமத்திற்கு மகிமை செலுத்த நீர் எங்களுக்கு அருள் செய்வீராக! கற்றுக்கொடுக்கிறவரும் போதிக்கிறவரும் உணர்த்துகிறவருமாகிய கர்த்தர் எங்களுக்கு போதுமானதவராய் இருப்பீராக! ஏசுவின் நாமத்தினால் பிதாவே. ஆமென்.
ஆசிரியர்: போதகர் தேவசகாயம்