காவேரியிலிருந்து தமிழகத்திற்கு ஜூலை மாதத்தில் 31 tmc தண்ணீர் திறக்க கர்நாடகாவிற்கு ஆணையம் உத்தரவு!

காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் முதல் கூட்டம் திரு.மசூத் உசைன் தலைமையில் இன்று நடைபெற்றது. காவிரி நதியிலிருந்து தமிழகத்திற்கு ஜூலை மாதத்தில் 31 tmc தண்ணீர் திரண்டு விட வேண்டும் என்று கர்நாடக அரசிற்கு மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த ஆணையத்தின் விதிகளின்படி மொத்தம் 9 பேர் கொண்ட இந்த குழுவில் 6 பேர் சம்மதம் தெரிவித்தாலே இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் ஏற்று கொள்ள பட்டதாக கருதப்படும். இப்படியிருக்க, தண்ணீர் திறப்பிற்கு புதுச்சேரி மற்றும் கேரள மாநிலங்கள் தமிழகத்திற்கு எதிராக எந்த முடிவுகளும் எடுக்கவில்லை. எனவே பெரும்பான்மையான ஆதரவுடன் தமிழகத்திற்கு 31 tmc தண்ணீர் திறந்து விடும் முடிவு இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

நான்கு மணி நேரக் கூட்டத்திற்குப் பின்னர் நிருபர்களிடம் பேசிய திரு.மசூத் உசைன், “நாங்கள் காவிரி ஆணையத்தின் கட்டமைப்பு மற்றும் அலுவலகத்தைப் பற்றியும், நீர் வரத்து மற்றும் வெளியேற்றத்தின் தொடர்பான காரணிகள் பற்றியும் விவாதித்தோம். மேலும், காவேரிலிருந்து தண்ணீர் விடுவிக்க தேவையான அனைத்து விவரங்களையும் பாதுகாக்க நாங்கள் முடிவு செய்து உள்ளோம்.” ஜூலை மாதத்தில் வெளியிடப்படும் நீர், ஜூன் மாதம் வெளியிடப்படும் தண்ணீரை விடவும் அதிகமாக இருக்கும் என்றும் உசைன் தெரிவித்தார். காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் கன மழை பெய்ததால், ஜூன் மாதம் 3 டி.எம்.சி. தண்ணீரை கூடுதலாக கர்நாடகம் வெளியிட்டுள்ளது. பிலிகுண்டுலு அணை நீர்மட்டத்தை அடிப்படையாகக் கொண்டு கர்நாடகாவின் நீர் வரும் மாதங்களில் திறந்து விடப்படும். காவிரி ஆணையத்தின் அடுத்த கூட்டம் ஜூலை மாதம் 5ம் தேதியில், இம்மாதம் நடந்த முதல் கூட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள உத்தரவுகள் நிறைவேற்றப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்யப்படும்.

இது குறித்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “இந்த கூட்டம் தமிழ்நாட்டை பொறுத்தவரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. ஜூலை மாதம் 31.24 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகா விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. உச்சநீதி மன்ற உத்தரவின்படி காவிரி நதியில் இருந்து 177.25 டி.எம்.சி. தண்ணீரை நாம் கண்டிப்பாக பெறுவோம்” என்று கூறினார்.

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com