காவேரி நதி நீர் போராட்ட வரலாறு | Timeline
காவேரி நதி நீர் பிரச்சனை சுமார் 125 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது.
10-05-1890ம் ஆண்டு ஊட்டியில் நடந்த மாநாட்டில் மைசூர் அரசர் கூறியதாவது, ‘காவேரி நதி மைசூரில் பிறப்பதால் மைசூர் அரசிற்கு காவேரி நதி நீர் அனைத்தையும் உபயோகிப்பதற்கு உரிமை உண்டு. ஆனால் இந்த பிறப்புரிமை மெட்ராஸ் மாகாணத்தின் நீர்ப்பாசன தேவைகளின்படி வரையறுக்கப்படும்’.
மெட்ராஸ் மற்றும் மைசூர் அரசுகளுக்கிடையே 1892 மற்றும் 1924ம் ஆண்டுகளில் நடந்த ஒப்பந்தங்களின்படி, 75% காவேரி நதி நீர் மெட்ராஸ் மாகாணத்திற்கும், 23% மைசூர் மாகாணத்திற்கும் , மற்ற உபரிநீர் கேரளத்திற்கும் பிரித்து கொடுக்கப்பட்டது.
1956ம் ஆண்டில் நடந்த மாநிலங்களின் மறுசீரமைப்பு பணிகளின்போது, காவேரி நதி நீர் பங்கீட்டு விவகாரம் கருத்து வேறுபாடுகளுக்கு உள்ளானது.
1960 முதல் 1980 களின் கடைசி வரை கர்நாடக அரசு மொத்தம் 4 அணைகளை காவேரி நதியில் கட்டியது. இதனால் தமிழகத்திலுள்ள காவேரி நீர்ப்பாசன வடிநிலங்கள் மிகவும் பாதிக்கப்பட்டது.
பெரும் சட்ட சவால்களுக்குப் பிறகு, 1990ம் ஆண்டு ஜூன் மாதம், காவேரி நீர் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டது.
16 ஆண்டுகளுக்கு பிறகு, சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பேரில் காவேரி நீர் கண்காணிப்புக் குழு தனது இறுதி தீர்ப்பை பிப்ரவரி 5ம் தேதி 2007ம் ஆண்டு வழங்கியது.
அந்த தீர்ப்பில், மெட்ராஸ் மற்றும் மைசூர் அரசுகளுக்கிடையே நடந்த ஒப்பந்தங்கள் இன்றும் செல்லுபடியாகும், என கூறப்பட்டது.
மொத்தமுள்ள 740 டி.எம்.சி நதி நீரை, 419 டி.எம்.சி நீர் தமிழகத்திற்கும், 270 டி.எம்.சி நீர் கர்நாடகத்திற்கு, 30 டி.எம்.சி நீர் கேரளத்திற்கும், 7 டி.எம்.சி நீர் புதுச்சேரிக்கும், 14 டி.எம்.சி நீர் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் காவேரி நீர் கண்காணிப்புக் குழு பிரித்து வழங்கியது.
இதை எதிர்த்து கர்நாடக அரசு தொடுத்த வழக்கில், சுப்ரீம் கோர்ட் பிப்ரவரி 17ம் தேதி 2018 அளித்த தீர்ப்பில் தமிழகத்திற்குரிய காவேரி நீரை குறைத்தது.
2000ம் ஆண்டுகளுக்கு முன் கரிகாலச் சோழன் நீர்ப்பாசன தேவைகளுக்கு காவேரி நதியில் அமைத்த கல்லணை மண் மேடாக மாறுமா?
தலைப்பு படம்: By Jenny Walter [வணிக பயன்பாட்டிற்கு இலவசம், பட உரிமையாளரை மேற்கோள் காட்ட வேண்டியதில்லை], via CC0 கிரியேடிவ் காமன்ஸ், பிக்சாபே.காம் வலைத்தளத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.