காலங்கள்
இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். சங்கீதம் முப்பத்தி ஐந்து பதினொன்றில் எமது காலங்கள் உமது கரத்திலே இருக்கிறது. என் சத்ருக்களின் கைக்கும், என்னை துன்பப்படுத்துகிறவர்களின் கைக்கும் என்னைத் தப்புவிப்பீராக என்று தாவீது ஜெபிக்கின்றான். என் காலங்கள் ஆண்டவரின் கரத்திலே இருக்கிறது அவரே என் ஜுவகாலம் முழுவதும் என்னை பாதுகாக்கிறவர். ஆனாலும் சத்ருக்கள் என்னை சூழ்ந்திருக்கிறார்கள். எந்த நேரத்திலே என்னை அழித்துவிடலாம் என்று சொல்லி திட்டம் போட்டு கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட பொல்லாதவர்களுடைய கைகளுக்கு என்னை நீங்கலாக்கி காத்துக் கொள்ள வேண்டும் என்று மனதுருக்கத்தோடு ஜெபிக்கிறான்.
என்னை துன்பப்படுத்துகிறவர்களுடைய கைக்கு என்னை தப்புவியும் என்று சொல்லி தாவீது வேண்டிக் கொள்கிறான். ஆம் ஆண்டவரே! உலகத்திலே பொல்லாதவர்கள் பெருகி போனார்கள், துன்மார்க்கர் பெருகி போனார்கள், வேதனை கொடுத்து மற்றவர்களை கண்ணீர் சிந்த வைத்து வேடிக்கைப் பார்க்கத்தான் மக்கள் கூட்டம் பெருகிப் போனார்கள் கர்த்தாவே! நீரே எங்களுக்கு தஞ்சம், நீரே எங்களுக்கு அடைக்கலம். கர்த்தாவே! உமது பேரிலே நம்பிக்கையோடு விசுவாசத்தோடு கூட இருக்கிற உம்முடைய பிள்ளைகளை நீர் கண்ணோக்கி பாரும். உம்முடைய நாமத்தை தரித்திரிக்கிறதான மக்களுடைய புலம்பலை மாற்றும்.
சத்ருக்களுடைய எல்லா அக்கிரமக் கிரியைகளில் இருந்தும் விடுவித்து எங்களை இரட்சித்து கொள்வீராக. கர்த்தர் அற்புதங்களை செய்வீராக. தடைகளை அகற்றுகிவீராக. வேதனைகளை நீங்கச் செய்வீராக. பொல்லாதவர்கள் வெட்கப்பட்டு போவார்களாக. நீர் உம்முடைய பிள்ளைகளுக்கு அடைக்கலமாய் இருந்து காத்துக் கொள்ளும். கரம்பிடித்து வழி நடத்திச் செல்லும் கர்த்தாவே. இரக்கமுள்ள ஆண்டவரே! உம்மை நோக்கி பார்க்கிறோம். உம்முடைய இரக்கத்திற்காக கெஞ்சி நிற்கிறோம். எங்களுடைய காலங்கள் உம்முடைய கரத்திலே இருக்கிறது. எங்களுடைய ஜுவிய நாட்கள் எல்லாத்தையும் ஆளுகை செய்கிறவர் நீர் ஒருவரே கர்த்தாவே! பொல்லாதவர்கள் அல்ல, தீயவர்கள் அல்ல, அக்கிரமக்காரர்கள் அல்ல, கொடூரக்காரர்கள் அல்ல கர்த்தாவே. நீர் எங்களுடைய காலங்களை வைத்திருக்கிறீர் கர்த்தாவே. எல்லா நாட்களையும் எங்களுடைய நாட்களாக மாற்றிக்கொடும் கர்த்தாவே.
சஞ்சலங்கள் வருத்தங்கள் வேதனைகள் நீங்கி, சந்தோஷத்தை சமாதானத்தை நாங்கள் அனுபவித்து உமக்கு துதி ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கக் கிருபை செய்வீராக. என் ஆத்மாவே கர்த்தரை ஸ்தோத்திரி என்று சொல்லி நாங்கள் உம்மை மகிமைப்படுத்தும்படியான காலங்களை தாரும். அப்படிப்பட்டதான நன்மை உள்ள காலங்களை எங்களுக்கு தந்த எங்களை சந்தோஷப்படுத்துவீராக. பெரிய காரியங்களை செய்வீராக. ஏசுவின் மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென். ஆமென்.
ஆசிரியர்: போதகர் தேவசகாயம்