ஒலிவ மரம்
இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். சங்கீதம் ஐம்பத்திரெண்டு எட்டில், நானோ தேவனுடைய ஆலயத்தில் பச்சையான ஒலிவ மரத்தை போலிருக்கிறேன். தேவனுடைய கிருபையை என்றென்றைக்கும் நம்பியிருக்கிறேன். இது தாவீதுனுடைய நல்ல மகிழ்ச்சியான ஜெபம்.
நானோ தேவனுடைய ஆலயத்தில் பச்சையான ஒலிவ மரத்தை போலிருக்கிறேன். ஆண்டவருடைய பரிசுத்த ஆலயத்தை அலங்கரிக்கும்படியாக நான் வந்திருக்கிறேன். செழிப்பான ஒலிவ மர கிழையாக நான் வந்திருக்கிறேன். இந்த ஆலயத்திலே வந்திருக்கிறேன். இது அந்த ஆண்டவருக்கு மகிமை. என் ஆண்டவருடைய ஆலயத்திற்கு அலங்காரம். அங்கே கூடி வருகிற மக்களுக்கு அது பெரிய மகிழ்ச்சி.
கர்த்தாவே! என்னை அவ்விதமாக நீர் உருவாக்கி செல்கிற தயவிற்கு நன்றி செலுத்துகிறேன். உலகம் என்னை வஞ்சித்து போடாமல் உலகக் கரைகள் என்னை தீட்டுபடுத்தி விடாதபடிக்கு என் ஆண்டவர் தம்முடைய சட்டைகளின் நிழலிலே வைத்து இம்மட்டும் பாதுகாத்து வந்தீரே, பராமரித்து வந்தீரே, அதற்காக நான் உம்மை ஸ்த்தோத்திரிக்கிறேன். உம்முடைய பரிசுத்த ஆலயத்திலே கூடி வரும்படியான பாக்கியத்தை கொடுத்தீரே அதற்காக உமக்கு ஸ்தோத்திரம். தேவனுடைய கிருபையை நினைத்து நான் உம்மை மகிமைப்படுத்துகிறேன். தகுதியற்ற எனக்கு நல்ல பாக்கியத்தை கொடுத்தீர். உமது ஆலயத்தை வாஞ்சித்து வரும்படியாக. உம்முடைய சமூகத்திலே வந்து நிற்கும்படியாக ஒரு நல்ல பாக்கியத்தை கொடுத்தீர், ஸ்லாக்கியத்தை கொடுத்தீர். அதற்காக நான் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.
ஆண்டவரே! இன்னும் நீர் என்னோடுகூட இருப்பீராக. இன்னும் உம்முடைய தயவுள்ள கரம் என்னை பலப்படுத்துவதாக. உம்முடைய நாமத்திற்கு மகிமையான காரியங்களை செய்ய அருள் செய்வீராக. உமக்கு மகிமையான காரியங்களை செய்ய நீர் கிருபை பாராட்டுவீராக. சத்துவப்படுத்துவீராக. வழிவாசல்களை திறந்து கொடுக்கிற தேவன், உம்முடைய நாமத்தை மகிமைப்படுத்துவீராக. யாரை கொண்டாகிலும், ஆண்டவரே! எந்த சூழ்நிலையை கொண்டாகிலும் தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்த வல்லவனாக இருக்கிறேன்.
இரக்கமுள்ள ஆண்டவரே! உமக்கு முன்பாக எம்மை தாழ்த்தி நிற்கிறோம். நாங்கள் உம்முடைய சமூகத்திலே உம்முடைய நாமத்திற்கு மகிமை உண்டாவதாக நிற்க வேண்டும். உம்முடைய பரிசுத்த ஸ்தலத்திற்கு ஏற்ற சித்தாங்கம் உடையவர்களாக இருக்க வேண்டும். ஓடி வருகிற மக்களை நாங்கள் மகிழ்விக்கிறவர்களாக நாங்கள் இருக்க வேண்டும். அநேகருக்கு நாங்கள் நம்பிக்கையையும், விசுவாசத்தையும் நாங்கள் கற்று கொடுக்கிறவர்களாக இருக்க வேண்டும். நீர் எங்களோடுகூட இருப்பீராக. எங்களை எடுத்து நீர் பயன்படுத்துவீராக. நீர் எங்களுக்கு ஆலோசனை கர்த்தராய் வழிகாட்டியாய் இருப்பீராக. பெரிய காரியங்களை செய்யும். இந்த ஜெபத்தை தியானிக்கிற சகோதர, சகோதரிகளுக்கு அவர்களுக்கு வேண்டியவைகளை கொடுத்து அவர்களை சந்தோஷப்படுத்துவீராக. ஏசுவின் நாமத்தினால் பிதாவே. ஆமென். ஆமென்.
ஆசிரியர்: போதகர் தேவசகாயம்