என்னை விலக்காதிரும்!
இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். சங்கீதம் ஐம்பத்தியொன்று பதினொன்றில், உமது சமூகத்தைவிட்டு என்னை தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்து கொள்ளாமலும் இரும். இது தாவீதுனுடைய இன்னொரு விஷேசித்த ஜெபம். உமது சமூகத்தை விட்டு என்னை தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்து கொள்ளாமலும் இரும். என்னை வெறுமையாக்கி விடாதிரும். எனக்குள்ளாக நீர் கொடுத்திருக்கிற நன்மையை எடுத்து கொள்ளாமல் இரும். ஆனால் நான் உன்னை துக்கப்படுத்தியிருக்கிறேன். நான் உம்மை விசாரப்படுத்தியிருக்கிறேன். நான் உம்மை நோகப்பண்ணியிருக்கிறேன். நான் உம்முடைய நாமத்திற்கு அவகீர்த்தியான காரியங்களை செய்திருக்கிறேன்.
உம்முடைய பரிசுத்த நாமத்தை பரிசுத்த குளச்சலாக்கியிருக்கிறேன். நான் கீழ்படியாமையின் மகனாக இருந்திருக்கிறேன். பரிசுத்த ஆவியானவரை நான் துக்கப்படுத்தியிருக்கிறேன். ஆண்டவரே, நீர் என்னை நேசித்தாலும் நான் உம்மை துரோகித்து, உம்மை விரோதித்து உமக்கு எதிரடியான காரியங்களை செய்திருக்கிறேன் கர்த்தாவே. உம்மை பகைத்து, உம்மை வெறுத்து, உம்மை தூஷித்து உம்முடைய நாமத்தை அவமானப்படுத்தி கொண்டிருக்கிறேன். ஆனால் ஆண்டவரே, உம்முடைய கரத்தின் கிரியையால் இந்த அடியேனை நீர் கண்ணோக்கி பார்ப்பீராக.
நீர் கொடுத்த சுவாசத்தினால் வாழ்ந்து கொண்டிருக்கிற என்னை உம்முடைய சமூகத்தை விட்டு தள்ளாமலும், உம்முடைய பரிசுத்த ஆவியனவராகிய ஆண்டவரை என்னிடத்திலிருந்து எடுத்து கொள்ளாமலும் இரும். உமது கிருபை என்னை தாங்கட்டும். அவர் என்னை உணர்த்துவாராக. அவர் என்னை சுட்டிகாட்டி என்னை சரிசெய்வாராக. ஆகவே அந்த பரிசுத்த ஆவியானவரின் கிருபை எனக்கு வேண்டும். அந்த தயவை தாரும். இரக்கமுள்ள ஆண்டவரே! எங்கள் குற்றம், குறைகளை அறிக்கையிடுகிறோம். மனஸ்தாபப்படுகிறோம் கர்த்தாவே! அறிந்தும், துணிந்தும், மேட்டுமையோடும், பெருமையோடும், அகங்காரத்தோடும், ஆணவத்தோடும் நாங்கள் செய்த எல்லா பரிசுத்த குளச்சலான பாவக்கிரியைகளையும் மன்னிப்பீராக. கர்த்தாவே இரக்கம் பாராட்டுவீராக. நீர் எங்களுக்கு கிருபையாக கொடுத்திருக்கிற உம்முடைய பரிசுத்த ஆவியானவரை எங்களில் இருந்து எடுத்துகொள்ளாதிரும் கர்த்தாவே! அவர் எங்களோடுகூட இருப்பாராக.
பரிசுத்த ஆவியானவரே எங்களை பலப்படுத்துவாராக. உம்முடைய தயவுள்ள கரம் எங்களோடுகூட இருக்கட்டும். உம்மை நோக்கி மன்றாடி வேண்டிகொண்டிருக்கிற ஒவ்வொரு சகோதரன், சகோதரிகளுக்கு வேண்டிய நன்மைகளை கொடுத்து, ஆசிர்வாதங்களை கொடுத்து அவர்களை சந்தோஷப்படுத்துவீராக. பெரிய காரியங்களை செய்யும் ஏசு கிறிஸ்து மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென். ஆமென்.
ஆசிரியர்: போதகர் தேவசகாயம்