இருதயம்
இன்றைய நாளில் எலிசாவின் ஜெபத்தை தியானிக்க இருக்கிறோம். இரண்டு ராஜாக்கள் மூன்றாம் அதிகாரம் பதினேழாவது வசனத்திலே நீங்கள் காற்றின் காணமாட்டீர்கள், மலையையும் காணமாட்டீர்கள் ஆனாலும் நீங்களும் உங்கள் ஆடு, மாடுகளும் உங்கள் மிருக ஜுவன்களும் குடிக்கும்படிக்கு பள்ளத்தாக்கு தண்ணீரால் நிரப்பப்படும். இந்த வார்த்தைகளை ஜெபமமாக எலிசா சொல்லுகிறான்.
ஆகாப் ராஜாவின் மரணத்திற்கு பின்னர் தன்னுடைய குமாரனாகிய யோரான் யூதாவின் ராஜாவாகிய யோசேப்பாத்தோடு சேர்ந்து கொண்டு ஏதோம் ராஜாவையும் தங்களோடுகூட சேர்த்துகொண்டு அங்கே யுத்தத்திற்காக கடந்து செல்கிறார்கள். அந்த யுத்தத்திற்காக அவர்கள் ஆயத்தபட்டு செல்லும்பொழுது வனாந்தரத்திலே சுற்றி திரிகிறார்கள். தண்ணீர் இல்லை. யுத்த வீரர்களுக்கும், மிருக ஜுவன்களுக்கும், இன்னும் எல்லா மிருகங்களுக்கும் தண்ணீர் இல்லாத நிலை. அப்படிப்பட்ட நேரத்திலே எலிசா தீர்க்கதரிசி இந்த பகுதியிலே இருக்கிறார் என்பதை கேள்விப்பட்டு, அவரிடத்திலே சென்று தம்முடைய பிரச்சனைகளை சொல்கிறார்கள். எகிதாவின் ராஜாவுக்காக நன்மை செய்வதற்காக எலிசா தீர்க்கதரிசி இந்த வார்த்தைகளை சொல்கிறார்.
நீங்கள் காற்றையும் காணமாட்டீர்கள் மலையையும் காணமாட்டீர்கள். ஆகிலும் நீங்களும் உங்களுடைய மிருக ஜுவன்களும் குடிக்கும்படியாக கர்த்தர் தண்ணீரை கட்டளையிடுவார். பள்ளத்தாக்கிலே நீங்கள் வாய்க்கால்களை வெட்டுங்கள் என்று சொல்கிறான். வார்த்தையின்படி செய்தார்கள். கர்த்தர் அற்புதத்தை செய்தார். இரவோடு இரவாக அந்த பள்ளத்தாக்கிலே ஏராளமான தண்ணீரை கொடுத்தார். எலிசாவினுடைய இருதயத்துனுடைய நினைவே அவனுடைய சிந்தனையே ஒரு ஜெபமாக அமைந்துவிட்டது. அதேபோன்று நம் ஒவ்வொருவருடைய இருதய சிந்தனையையும் ஜெபமாக ஆண்டவர் ஏற்றுகொள்ள வல்லவராக இருக்கிறார்.
நம் இருதயம் கர்த்தருக்கு நேராக திரும்புகிற பொழுது கர்த்தர் நம்மை அங்கீகரிப்பார். கர்த்தாவே! நீர் எங்களுக்கு உதவி செய்வீராக! யாருக்கு நாங்கள் உதவி செய்ய வேண்டுமோ, எந்த மக்களுக்கு நாங்கள் நன்மை செய்ய வேண்டும் என்று நீர் விரும்புகிறீரோ அந்த நன்மைகளை நாங்கள் செய்ய நாங்கள் விரும்புகிற பொழுது அதை எங்களுக்கு கைகூடி வர பண்ணும். எங்கள் மூலமாகவும் நாங்கள் உமக்கு மகிமை கொண்டுவர எங்களுக்கு அருள் பாராட்டுவீராக.
உம்முடைய கிருபையின் கரத்தினால் எங்களை தாங்குவீராக, ஏந்துவீராக, வழிநடத்துவீராக! அதிசயங்களையும், அற்புதங்களையும் செய்து ஆசிர்வதிப்பீராக! இந்த தியான ஜெபத்திலே பங்கு கொள்கிற ஒவ்வொரு சகோதரனையும், சகோதரியையும் நீர் ஆசிர்வதித்து அவர்களை சந்தோஷப்படுத்துவீராக! கிருபைகளோடுகூட இருக்கட்டும். ஏசு கிறிஸ்துவின் மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென். ஆமென்.
ஆசிரியர்: போதகர் தேவசகாயம்