ஆனந்த களிப்பு

இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். சங்கீதம் முப்பது பதினொன்றில், என் புலம்பலை ஆனந்த களிப்பாக மாற பண்ணுனீர், என் மகிமை அமர்ந்திராமல் உம்மை கீர்த்தனம் பண்ணும்படியாக நீர் என் இரட்டை களைந்து போட்டு, மகிழ்ச்சியென்னும் கட்டினால் என்னை இடைகட்டினீர். என் புலம்பலை ஆனந்த களிப்பாக மாறப் பண்ணினீர்.

மிகுந்த வேதனையோடும், சஞ்சலத்தோடும், கண்ணீரோடும் பக்தியோடு கூட உம்மை நோக்கி மன்றாடி வேண்டிகொண்டிருந்த அடியேனுடைய ஜெபத்தை நீர் கேட்டு, உதவியில்லாமல் ஒத்தாசையில்லாமல் அங்கலாய்த்து கொண்டிருந்ததான எனக்கு நீர் கிருபை கிடைக்க பண்ணினீர். என் புலம்பலை மாற்றி கண்ணீடிரைத் துடைத்தீர். என் வேதனைகளை நீங்க செய்து என்னை சந்தோஷப்பண்ணுனீர். ஆகவே நான் உம்மை துதிக்கிறேன் கர்த்தாவே!

உம்முடைய இரக்கங்களுக்காக உம்முடைய நன்மைகளை பெற்றுகொள்வதற்காக நொருங்கி மனவேதனையோடு துக்கத்தோடு சஞ்சலத்தோடு இரட்டை உடைத்து சாம்பலிலே உட்கார்ந்து, ஆண்டவரே கதறி அழுத என்னுடைய புலம்பலை நீர் மாற்றினீர். என்னுடைய இரட்டை கலைந்து போட்டீர். என்னுடைய துக்க விஷனத்தை மாற்றி போட்டீர். எனக்கு சமாதானத்தை சந்தோஷத்தை அருளிச்செய்தீர். நான் உம்மை துதிக்கும்படியான பாக்கியத்தை கொடுத்தீர். கர்த்தாவே! என்னை மகிழப் பண்ணியிருக்கிறீர். வேதனைகளை நீங்க செய்திருக்கிறீர். ஆறுதலையும் தேறுதலையும் சமாதானத்தையும் சந்தோஷத்தையும் நீர் அருளிச் செய்திருக்கிறீர். அதற்காக நாங்கள் உம்மை ஸ்தோத்திரிக்கிறோம். உம்மை மகிமைப்படுத்துகிறோம். கர்த்தாவே! இதை போன்ற சூழ்நிலைகளிலே இருக்கிற தம்முடைய பிள்ளைகளை நீர் நோக்கி பார்ப்பீராக. உம்முடைய சமூகத்திலே கதறி அழுது உம்முடைய இரக்கத்திற்காக மன்றாடுகிற ஒவ்வொருவருடைய ஜெபத்தை நீர் கேட்பீராக. நான் உங்களை திக்கற்றவர்களாகவிடேன் என்று சொன்ன கர்த்தர் தம்முடைய பிள்ளைகளுக்கு உதவி செய்வீராக.

கர்த்தாவே! அவர்களை நீர் திடப்படுத்தும் நீர் அவர்களுக்கு நன்மை செய்யும். எல்லா வேதனைகளையும் நீங்க செய்து சந்தோஷத்தினால், சமாதானத்தினால் எங்களை ஆசிர்வதித்து சந்தோஷப்படுத்துவீராக. உன் துக்க நாட்கள் முடிந்துபோகும் என்று சொன்ன தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கு நீர் போதுமானவராக இருக்க வேண்டும் என்று சொல்லி ஜெபிக்கிறோம். நீரே எமக்கு போதுமானவராக இருப்பீராக. ஏசு கிறிஸ்து மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென்.

ஆசிரியர்: போதகர் தேவசகாயம்

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com