அரவணைப்பு
இன்றைய நாளில் தாவீதுடைய இன்னொரு ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். சங்கீதங்களின் புஸ்தகம் ஆறு இரண்டிலே என்மேல் இரக்கமாய் இரும். கர்த்தாவே! நான் பலனற்று போனேன். என்னை குணமாக்கும் கர்த்தாவே என் எலும்புகள் நடுங்குகிறது. தாவீது இவ்விதமாக ஜெபிக்கிறான்.
என்மேல் இரக்கமாய் இரும். நான் பலனற்று போனேன். பலமுள்ள ஆண்டவர் உம்முடைய பலத்தினால் என்னை இடரிட்டுவீராக. திடப்படுத்துவீராக. எனக்கு உதவியாய் இருப்பீராக. திடமினன்டு பலமினன்டு ஒன்றுக்கும் உதவாதவனென்று நீர் என்னை தள்ளிவிடாமல் இருப்பீராக. உம்முடைய தயையுள்ள கரம் என்னை அரவணைத்து கொள்ளட்டும். உம்முடைய அன்பின் கரத்தினால் என்னை தொட்டு பலப்படுத்தூவீராக. சத்துவப்படுத்துவீராக. என்னை குணமாக்கும் என்னிலே சுகமில்லை. ஆரோக்கியமில்லை. பலவீனமாக காணப்படுகிறேன்.
இதயம் நொந்து சரீரம் பலவீனப்பட்டு துக்கத்தோடுகூட காணப்படுகிறேன். என்னை குணமாக்குவீராக. உம்முடைய ஆவியிலும் ஆத்துமாவினுடைய சரீரத்திலும் ஆரோக்கியத்தை தந்து சந்தோஷத்தை கொடுத்து ஆசிர்வதிப்பீராக. கர்த்தாவே! என் எலும்புகள் நடுங்குகிறது உமக்கு முன்பாக. சர்வ வல்லமையுள்ள ஆண்டவருக்கு முன்பாக நடுங்குகிறது. நீதியுள்ள ஆண்டவருக்கு முன்பாக எம் கால்கள் நடுங்குகிறது. பரிசுத்தமுள்ள ஆண்டவருக்கு முன்பாக என் கால்கள் நடுங்குகிறது.
எளியவனான என்னை கண்ணோக்கி பார்ப்பீராக. கிருபையினால் உதவி செய்வீராக. உம்முடைய இரத்தத்தினால் கழுவுவீராக. சுத்தப்படுத்துவீராக. ஆரோக்கியத்தை கொடுப்பீராக. சமாதனத்தை சந்தோஷத்தை அருளச்செய்வீராக. கர்த்தாவே! நீரே பெரியவர் நீரே எங்களை இரட்சிக்கிறவர். நீர் எங்களுக்கு உதவி செய்வீராக.
இரக்கமுள்ள ஆண்டவரே! இந்த வேளையிலே எங்களை தாழ்த்தி அற்பணிக்கிறோம். இரக்கமாய் இரும். கிருபையாய் எங்களை நோக்கிப் பாரும். பலனற்று போன எங்களை திடப்படுத்துவீராக. தைரியப்படுத்துவீராக. சந்தோஷப்படுத்துவீராக. என்னிலே எங்களிலே இருக்கிற சுகவீனங்கள் பலவீனங்கள் வியாதிகள் எல்லாவற்றையும் அப்புறப்படுத்தி போட்டு எங்களுக்கு சுகத்தை தாரும். ஆரோக்கியத்தை தாரும். சமாதானத்தை தாரும் ஆண்டவரே. உம்முடைய பலத்தினால் எம்மை திடப்படுத்தும். நாங்கள் காலோன்றி நின்று உமக்கு மகிமை செலுத்த திடசாட்சியாய் உமக்கு ஸ்தோத்திரங்களை ஏறெடுக்க எங்களை பலப்படுத்தும். பெரிய காரியங்களை செய்யும். இந்த ஜெபத்தை தியானிக்கிற ஒவ்வொருவருக்கும் வேண்டிய பலத்தை கொடுத்து சந்தோஷப்படுத்துவீராக. ஏசுவின் நாமத்தினால் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென். ஆமென்.
ஆசிரியர்: போகர் தேவசகாயம்