வாக்குதத்தம்

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. இந்நாளின் ஜெபத்தை மோசே ஏறெடுக்கிறான். எபாகம புஸ்தகம் முதலாம் அதிகாரம் பதினோராம் வசனத்திலே இந்த ஜெபத்தை நாம் பார்க்கிறோம்.

நீங்கள் இப்பொழுது இருக்கிறதை பார்க்கிலும் ஆயிரம் மடங்கு அதிகமாகும்படி உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு சொல்லியப்படியே உங்களை ஆசிர்வதிப்பாராக! என்று சொல்லி மோசே ஜெபிக்கிறான். எகிப்திலிருந்து இஸ்ரேல் ஜனங்களை காணானுக்கு நேராக வழி நடத்தி வருகிறான்.  பல ராஜாக்களை யுத்தத்திலே ஜெயிக்க வேண்டிய நிலை.

கர்த்தருடைய அனுக்கிரகம் அவருடைய வழிநடத்துதல் அவருடைய ஆலோசனையின் படியாக சகல காரியங்களையும் ஜெயமாகிவித்தியாக அவன் கேட்டுக்கொள்கிறான்.  ஜனங்கள் எல்லோரையும் அங்கே யுவதானியங்களை எடுத்து தானே பூமி விளைக்குமாறு அழைத்துக்கொண்டு வருகிறான். அந்த காலகட்டங்களிலே அவர்களை அவர் ஆசிர்வதிக்கிறார்.  இன்றைய காணான்தேசமும் அந்த நன்மைகளும் இந்த இஸ்ரவேல் ஜனங்களுக்கு கிடைக்கிற பொழுது அவருக்கு ஒரு பெரிய சந்தோஷத்தையும் சமாதானத்தையும் கொடுக்கும் என்று சொல்லி அவன் மனப்பூர்வமாக அவர்களை ஆசிர்வதிக்கிறான். இந்த ஜனங்கள் ஏராளமாக பெருகிவருகிறதை பார்த்து அவன் சந்தோஷப்படுகிறான். அது ஒரு பெரிய வாக்குதத்தம் வானத்தின் நட்சத்திரங்களை போல, கடற்கரை மணலைப் போல, எண்ணிமுடியாததாக இருக்கும் என்று சொல்லிய வார்த்தையின் படி கர்த்தர் அவர்களை பெருக செய்திருக்கிறார். ஆசிர்வதித்து வந்திருக்கிறார். அதற்காக அவன் நன்றி சொல்லுகிறான். இப்பொழுது இருக்கிறதை பார்க்கிலும் ஆயிரம் மடங்கு உங்களை கர்த்தர் பெருக பண்ணுவாராக ஆசிர்வதிப்பாராக என்று சொல்கிறதை நாம் பார்க்கிறோம்.

ஏராளமான உத்திரபாக்கியம் குழந்தை பாக்கியம் மக்கட்பேறு இவைகளை கர்த்தர் கொடுப்பேன் என்று சொல்லியிருக்கிறார். ஆபிரகாமிற்கு கொடுத்த வாக்குதத்தமும் அதுதானே. அந்த வாக்குதத்தத்தை நாமும் நம்முடையதகளாக நாம் மாற்றிக்கொள்ளுவோம். கர்த்தருக்கு பயப்படுகிற மக்களை கர்த்தர் ஆசிர்வதிப்பார். சிறியோரையும் பெரியோரையும் ஆசிர்வதிப்பார்.

இரக்கமுள்ள ஆண்டவரே! இவர்களுக்காக உம்மை ஸ்த்தோத்திக்கிறோம். நன்றி செலுத்துகிறோம். இப்பொழுது இருக்கிறதை பார்க்கிலும் ஆயிரம் மடங்கு உங்களை கர்த்தர் பெருகபண்ணுவாராக! ஆசிர்வதிப்பாராக! என்று சொன்ன வார்த்தையின்படியாகவே இந்த ஜெபவேளையிலே உம்முடைய சமூகத்திலே எங்களை தாழ்த்தி அர்ப்பணித்திருக்கிற ஒவ்வொரு பிள்ளைகளுடைய வாழ்க்கையிலும் குழந்தை பாக்கியங்களை, உத்திர பாக்கியங்களை, பிள்ளைகளை, பேர பிள்ளைகளை நீர் கொடுத்து அவருடைய சந்ததிகள் பெருக, பிள்ளைகளை ஆசிர்வதித்து சந்தோஷப்படுத்த வேண்டுமாக ஜெபிக்கிறோம். ஏசுவின் நாமத்தினாலே பிதாவே! ஆமென். ஆமென்.

ஆசிரியர்: போதகர் தேவசகாயம்

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com