வல்லமையுள்ள தேவன்
இன்றைய நாளிலே எசேக்கியா ராஜாவினுடைய ஜெபத்தை தியானிக்க இருக்கிறோம். இரண்டு ராஜாக்களின் புஸ்தகம் பத்தொன்பதாம் அதிகாரம் பத்தொன்பதாவது வசனத்திலே எங்கள் தேவனாகிய கர்த்தாவே! நீர் ஒருவரே, தேவனாகிய கர்த்தர் என்று பூமியின் ராஜ்ஜியங்கள் எல்லாம் அறியும்படிக்கு எங்களை அவன் கைக்கு நீங்களாக்கி இரட்சியும். இந்த ஜெபத்தை எசேக்கியா ராஜா ஏறெடுக்கிறான். அசிரியாவின் ராஜாவாகிய ஜனகரின் திரளான படைவீரர்களை இஸ்ரவேல் தேசத்திற்கு நேராக எசேக்கியா ராஜாவிற்கு எதிராக அனுப்புகின்றான். அவனுடைய படைத்தளபதிகளாகிய வலரையும் அனுப்புகிறான்.
ரப்சாகேயையும் அனுப்புகிறான். எசேக்கியா ராஜாவுக்காக ஜனகர் ஒரு கடிதத்தையும் எழுதி கொடுத்து அனுப்புகிறான். அந்த கடிதத்திலே இஸ்ரவேலின் ஜுவனுள்ள ஆண்டவரை நிந்தித்தும், இஸ்ரவேல் ஜனங்களை அவமதித்தும் பரிகாசம் செய்தும் அவர்களை துக்கப்படுத்தும் படியான வார்த்தைகள் எல்லாம் அந்த கடிதத்திலே எழுதி அனுப்புகின்றான். ரப்சாகே இந்த கடிதத்தை எசேக்கியா ராஜாவினிடத்திலே கொடுத்து அனுப்புகிறான். அந்த கடிதத்தை வாங்கி படித்து பார்த்த எசேக்கியா ராஜா, நேரடையாக தானே ஆலயத்திற்கு சென்று பலிபீடத்திற்கு முன்பாக மண்டியிட்டு இந்த கடிதத்தை கர்த்தருக்கு முன்பாக விரித்து வைத்து அவன் ஆண்டவரித்திலே மன்றாடுகிறான்.
கர்த்தாவே! நீர் பாரும், நீர் கேளும் என்று சொல்லி மன்றாடுகிறான். எங்கள் தேவனாகிய கர்த்தாவே! நீர் ஒருவரே தேவனாகிய கர்த்தர்! என்று பூமியின் ராஜ்ஜியங்கள் எல்லாம் அறியும்படிக்கு எங்களை அவன் கைக்கு நீங்களாக்கும் என்று சொல்லி மன்றாடுகிறான். நீர் எங்களை காண்கிற தேவன் எங்களுடைய நிந்தனைகள் உங்களுக்கு தெரியும் அசிரியா ராஜாவின் வார்த்தைகளை நீர் கேட்டு இருக்கிறீர்.
கர்த்தாவே! நீர் பதில் கொடுப்பீராக! சத்ருக்களை நீர் பதில் கொடுத்து வதம் பண்ணுவீராக! நீர் ஒருவரே ஜுவனுள்ள ஆண்டவர் என்பதை நீர் மெய்பித்து காட்ட வேண்டும். நாங்களும் உம்முடைய பிள்ளைகள் உம்முடைய நாமம் தரிக்கப்பட்ட உம்முடைய ஜனங்களாகிய எங்களுக்கு இந்த நன்மைகளை தாரும் என்று சொல்லி எசேக்கியா ராஜா கர்த்தருடைய சமூகத்திலே மன்றாடி ஜெபிக்கிறார். அந்த இரவிலே கர்த்தர் தம்முடைய தூதனை அசிரியாவின் படைகளுக்கு முன்பாக அனுப்பினார். ஒரே நாளிலே இலட்சத்து இருபதனாயிரம் பேர் செத்து மடிந்தார்கள். அசிரிய படை அழிந்து போயிற்று. இஸ்ரவேல் ஜனங்கள் ஆண்டவரை மகிமைபடுத்தினார்கள்.
கர்த்தாவே! நீர் ஒருவரே ஜுவனுள்ள ஆண்டவர். ராஜ்ஜியங்களை ஆளுகை செய்கிறவர். தேசங்களை ஆளுகை செய்கிறவர். எல்லா விகாரத்தையும் நீர் உடையவர். நீர் சர்வ வல்லமையுள்ள தேவன். ராஜாக்களை ஏற்படுத்துகிற தேவனாக இருக்கிறீர். நீர் நீதியும், உண்மையும், சத்தியமும் உள்ள தேவன். நீர் வல்லமையுள்ள தேவன். பலாக்கிரமமான காரியங்களை செய்கிற தேவன். பெரிய காரியங்களை செய்து இஸ்ரவேல் ஜனங்களுக்கு பெரிய இரட்சிப்பை கட்டளையிட்ட கர்த்தர் எங்களுடைய வாழ்க்கையிலும் அத்தகைய சூழ்நிலையிலே நன்மை தாரும். எங்களுக்கு உண்டான பிரச்சனைகள், போராட்டங்கள் எல்லாவற்றிலும் இருந்து விடுதலை தாரும். எங்களை காத்து கொள்ளும். கிருபையினால் தாங்கும். இந்த ஜெபத்தை தியானிக்கிற ஒவ்வொருக்கும் வேண்டிய நன்மைகளை கொடுத்து ஆசிர்வதிப்பீராக! ஏசுவின் மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே ஆமென். ஆமென்.
ஆசிரியர்: போதகர் தேவசகாயம்