யுத்தம்
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. இந்நாளின் ஜெபத்தை யோசுவா, கர்த்தருடைய தாசனாகிய யோசுவா ஏறெடுக்கிறதை நாம் பார்க்கிறோம். யோசுவாவின் புஸ்தகம் ஏழாம் அதிகாரம் ஏழாவது வசனத்திலே யோசுவா, கர்த்தராகிய ஆண்டவரே! எங்களை அழிக்கும்படிக்கு எமோரியர் கைகளில் ஒப்புக்கொடுக்க, ஒப்புவிக்காதிருப்பீராக.
தேவரீர்! இந்த ஜனத்தை யோதானை கடக்கப்பண்ணுனீர். நாங்கள் யோதனாக்கு அப்புறத்தில் மனதிருப்தியாக இருந்தோம் என்று சொல்லுகிறான். ஆண்டவரே! இஸ்ரவேலே தங்கள் சத்ருக்களுக்கு முதுகை காட்டினார்கள். இப்பொழுது நான் என்ன சொல்லுவேன், இப்பொழுது நான் என்ன சொல்லுவேன் என்று சொல்லி அந்தத் தோல்வியின் நிமித்தமாக ஆண்டவரிடத்திலே மன்றாடுகிதை நாம் பார்க்கிறோம். யோதானைக் கடந்து எரிகோவுக்கு நேராக கடந்து சென்று, எரிகோவின் யுத்தத்திலே அவர்கள் ஜெயம் பெற்றார்கள். அடுத்தப்படியாக ஆயி என்று சொல்லப்படுகிற சிறிய பட்டினத்தின்மேல் யுத்தம் செய்கிறார்கள், அங்கே தோல்வி ஏற்படுகிறது. அந்தத் தோல்வியினால் மன சோர்ந்து போன நிலையிலும் துக்கத்தோடு பாரத்தோடு யோசுவா கர்த்தருக்கு முன்பாக தன்னை தாழ்த்துகிறான்.
ஆண்டவரே! இந்தத் தோல்வி எங்களுக்கு ஒரு பெரிய நஷ்டமாகுமே! இஸ்ரவேல் ஜனங்கள் தோற்றுப்போனார்கள், அவர்களை மேற்கொண்டோம் என்று சொல்லி இந்த தேசத்திலே குடியிருக்கிற அந்நிய ராஜாக்கள் ஏத்தியர், எமோரியர், எபிசியர் போன்றதான ராஜாக்கள் எங்களை அழித்துவிடுவார்களே! எங்களுக்கு மேலாக அவர்களுடைய கை ஓங்கிவிடுமே! நான் என்ன சொல்வேன். உம்முடைய மகத்துவமான நாமத்திற்கு நான் என்ன சொல்வேன். என் ஜனங்களுக்கு நான் என்ன சொல்வேன் என்று சொல்லி வேதனையோடு கூட ஜெபிக்கிறான். நாமும் கர்த்தருக்கு முன்பாக நம்மை தாழ்த்துவோம்.
இரக்கமுள்ள ஆண்டவரே! எங்களுடைய நீடுதல்களினால், எங்களுடைய கீழ்ப்படியாமையினால் பல நேரங்களிலே நாங்கள் தவறுகளை செய்துவிடுகிறோம். உம்மை துக்கப்படுத்திவிடுகிறோம். அதனால் எங்களுக்கு நஷ்டங்கள், கஷ்டங்கள், வேதனைகள் எல்லாம் உண்டாகிறது. எங்களை தாழ்த்தி அற்பணிக்கிறோம். கிருபையாக இருப்பீராக!
உம்முடைய நாமத்தை தரித்து இருக்கிறோம். உம்முடைய பிள்ளைகளாகிய எங்களுக்கு ஆண்டவரே மற்ற மக்களால் ஏற்படக்கூடிய அந்த அவகீற்றில் இருந்து எங்களுக்கு விடுதலைத்தாரும். நான் உன்னுடைய நாமத்தை மகிமைப்படுத்த வேண்டும். உன்னுடைய கிருபை எங்களை தாங்கட்டும். நீர் எங்களை மன்னித்து அங்கீகரித்து ஏற்றுக்கொள்வீராக. கிருபையிருக்கட்டும். ஏசுவின் மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென்.
ஆசிரியர்: போதகர் தேவசகாயம்