மறுஉத்தரவு

இன்றைய நாளில் தாவீதின் இன்னொரு ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். சங்கீதங்களின் புஸ்தகம் பதினெட்டாம் அதிகாரம் ஆறாவது வசனத்திலே எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கி கூப்பிட்டு என் தேவனை நோக்கி அபயமிட்டேன். தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தை கேட்டார். என் கூப்பிடுதல் அவர் சன்னதிக்கு சென்று அவர் செவிகளில் ஏறிற்று. என் தேவனை நோக்கி நான் அபயமிட்டேன். என் கூப்பிடுதல் அவர் சன்னதிக்கு போய் அவர் செவிகளில் ஏறிற்று. தாவீதுனுடைய ஜெபத்தையும் நாம் பார்க்கிறோம். அவனுக்கு ஏற்பட்ட நம்பிக்கையையும் நாம் பார்க்கிறோம்.

ஜெபித்த தம்முடைய ஜெபத்திற்கு ஆண்டவர் பதில் கொடுப்பார். அவர் அதைக் கேட்டுவிட்டார். என் ஜெபத்தை அவர் கேட்டுவிட்டார். ஆகவே ஆண்டவர் விரைவிலே எனக்கு உதவி செய்வார் என்கிற ஒரு நிச்சயத்தையும் அவர் வெளிப்படுத்துகிறார். மரண அக்னிகள் எம்மை சூழ்ந்து கொண்டது. அபாயத்தில் இருக்கிறேன், ஆபத்தில் இருக்கிறேன், உயிருக்கு ஆபத்து நேரிட்டு இருக்கிறது. ஆனாலும் என் சஞ்சலத்தின் குரலிலே ஜெபத்தை கேட்கிற ஆண்டவர் எனக்கு உதவி செய்வார் என்கிற நிச்சயத்தோடு வேண்டிகொள்கிறான்.

கர்த்தாவே! அதிகமான ஜெபத்தை ஏறெடுக்கிற ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் நீர் உதவி செய்வீராக. ஆபத்து காலத்திலே என்னை நோக்கி கூப்பிடு நான் உனக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன் என்று சொன்ன கர்த்தர் நம் ஒவ்வொருவருடைய ஜெபத்தை கேட்பார். அவர் நமக்கு பதில் கொடுப்பார். நான் உங்களை திக்கற்றவர்களாகவிடேன் என்று சொல்லியிருக்கிறார். நானே விடுவிப்பேன் நானே உன்னை இரட்சிப்பேன் என்று கர்த்தர் வாக்கு கொடுத்து இருக்கிறார். நம்முடைய ஆண்டவர் வாக்கு மாறாதவர். இவர் உண்மையுள்ளவர். அவர் நம்முடைய ஜெபத்திற்கு பதில் கொடுத்து என்னை ஆசிர்வதிப்பார்.

இரக்கமுள்ள ஆண்டவரே! இந்த ஜெபத்தை தியானித்து கொண்டிருக்கிற ஒவ்வொரு பிள்ளைகளுக்கு வேண்டிய நன்மைகளை தந்தருளுவீராக. எத்தகையான ஆபத்தாக இருந்தாலும் மரண அபாயங்களாக இருந்தாலும் அநேக வஞ்சகர்களால் ஏற்படக்கூடிய சூழ்ச்சிகளாக இருந்தாலும் எல்லாவற்றிலும் இருந்து விடுதலை கொடுப்பீராக. எனக்கு விரோதமாக உருவாக்கப்படுகிற எந்த ஆயுதமும் வாய்க்காது போகும் என்று சொல்லிருக்கிறீர். எனக்கு விரோதமாக சொல்லப்படுகின்ற வார்த்தையின் ஆயுதங்கள் எல்லாம் வாய்க்காமல் போகும் என்று சொல்லி இருக்கிறீர். கிருபை உண்டாவதாக. இரக்கம் பாராட்டுவீராக. சகல ஆறுதலின் தேவன், சமாதானத்தின் தேவன், சந்தோஷத்தை அருளிச் செய்கிற தேவன். பிள்ளைகள் அனைவருக்கும் நீர் போதுமானவராக இருப்பீராக. இந்நாளிலே இந்த ஜெபத்தை தியானிக்கிற பிள்ளைகள் அனைவருக்கும் எல்லாவிதமான சந்தோஷத்தை கொடுத்து அவர்களை ஆசிர்வதிப்பீராக. ஏசு கிறிஸ்து மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென். ஆமென்.

ஆசிரியர்: போதகர் தேவசகாயம்

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com