மன்னிப்பு

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. இந்நாளின் ஜெபத்தை மோசே ஏறெடுக்கிறான். கர்த்தருடைய தவசனாகிய மோசே இந்த ஜெபத்தை யாத்திராகம புஸ்தகம் முப்பத்திரண்டாம் அதிகாரம் முப்பத்திரண்டாவது வசனத்திலே இந்த ஜெபத்தை சொல்கிறதை நாம் பார்க்கிறோம்.

தேவனே! அவர்கள் பாவத்தை மன்னித்து அருளுவீரானால் மன்னித்தருளும் இல்லாவிட்டால், நீர் எழுதின உம்முடைய புஸ்தகத்தில் இருந்து என் பெயரை கிருக்கிபோடும் என்றானாம்.  அவர்கள் பாவத்தை மன்னித்து அருளுவீரானால் மன்னித்தருளும் இல்லாவிட்டால், என் பெயரை உம்முடைய புஸ்தகத்தில் இருந்து கிருக்கிபோடும் என்று சொல்கிறான். கர்த்தருடைய அழைப்பின் படியாகிய மோசே சினாகி மலையைக் கடந்து சென்று நாற்பது நாட்கள் ஆண்டவரோடு உறவாடி கர்த்தர் கொடுத்த கற்பனைகளையும் கட்டளைகளையும் பெற்று வருகிறான்.  அதற்கு முன்பாக இந்த தாமதமான காரணத்தினாலே ஜனங்கள் மோசேக்கு என்ன ஆயிற்றோ என்று சொல்லி ஆரோனிடத்திலே முறையிடுகிறார்கள். எங்களுக்காக தேவத்தை உண்டுபண்ணும் என்று சொன்னப்பொழுது பொன்னுடைமை எங்கள் எல்லாவற்றையும் கேட்டு வாங்குகிறான், அவைகளை நெருப்பில் போடுகிறான். அங்கே கன்றுக்குட்டியை உண்டாக்கி அங்கே பண்டிகை என்று சொல்லி கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.  இந்த காரியத்தை மோசே உணருகிறான்.

கர்த்தரும் அவனை அனுப்புகிறார்.  இந்த வேளையிலே தான் கர்த்தர் நான் இந்த ஜனங்களை அழிக்கவே அழித்து, உன்னை ஒரு பெரிய ஜாதியாக மாற்றுவேன் என்று கர்த்தர் வாக்கு தருகிறார். ஆனால் மோசே தன் ஜனங்களுக்காக திறப்பின் வாசலிலே நின்று ஆண்டவரோடுகூட  மன்றாடுகிறான். ஜெபிக்கிறான். இந்த ஜனங்கள் பொல்லாத ஜனங்கள்தான், பனங்காக்களித்துள்ள ஜனங்கள்தான், தீர்ப்புடையாமையின் ஜனங்கள்தான், பாவம் செய்திருக்கிறார்கள் ஈடுதல் பண்ணியிருக்கிறார்கள்.

நீர் அவர்களை அழித்துப்போடுவீரானால் நஷ்டம் ஆண்டவரே இந்த ஜனங்களுக்காக மன்னிக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன். திறப்பின் வாசலில் நின்று மன்றாடுகிறான்.  நான் முக்கியமல்ல என் ஜனங்கள் முக்கியம் என்று சொல்லி மன்றாடுகிறான். கர்த்தர் அதைக் கேட்டு மன்னித்தார்.

இரக்கமுள்ள ஆண்டவரே! பாவத்தை மன்னிக்க பிறருடைய குற்றங்குறைகளை மன்னிக்க நீர் எங்களை மன்னிக்க எங்களுக்கு கற்றுத்தாரும். நான் முக்கியமல்ல நாங்கள் முக்கியமல்ல என் ஆண்டவருடைய நாமம் முக்கியம் அவர் தெரிந்துக் கொண்ட மக்கள் முக்கியம். அவர்கள் ஆசிர்வதிக்கப்பட வேண்டும். இந்த ஜெபத்தை கேட்பீராக! எங்களுக்கும் அருள் செய்வீராக! ஏசுவின் நாமத்தினால் பிதாவே! ஆமென். ஆமென்.

 

ஆசிரியர்: போதகர் தேவசகாயம்

 

 

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com