மனக்கலக்கம்

இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். சங்கீதம் முப்பத்தி மூன்று, முப்பத்தி இரண்டில் உம்முடைய கண்களுக்கு முன்பாக நான் இராதபடிக்கு வெட்டுண்டேன் என்று என் மனக்கலத்திலே சொன்னேன். ஆனாலும் நான் உம்மை நோக்கி கூப்பிட்ட போது என் விண்ணப்பங்களின் சத்தங்களை கேட்டீர். தாவீது தனக்கு இவ்விதமான ஒரு இடர்பாடு நேரிட்டு நான் அழிந்து போய் இருப்பேன், சத்ருக்களால் வெட்டப்பட்டு ஒன்றுமில்லாமல் போயிருப்பேன். எனக்கு இவ்விதமான ஒரு வேதனைகள் சம்பவித்து இருக்குமோ என்று சொல்கிற சஞ்சலத்தை அவன் வெளிப்படுத்தி காட்டுகிறதை நாம் பார்க்கிறோம்.

ஜுவனுள்ள ஆண்டவரின் கண்களுக்கு முன்பாகவே சத்ருக்கள் என்னை அழித்துப் போட்டிருப்பார்கள் என்று சொல்லி என்னுடைய மனக்கலக்கத்திலே நான் சொன்னேன். அதை ஒளிவு மறைவின்றி அவன் சொல்கின்றான். என் காலங்கள் கர்த்தருடைய கரத்திலே இருக்கிறதென்று உறுதிப்பாட்டை வெளிப்படுத்தின தாவீதுக்கு ஒரு நெருக்கம் வருகிறது. சத்ரு என்னை விழுங்கிப்போடுவானோ? என்னை அழித்துபோடுவானோ? என்று ஒரு அவநம்பிக்கை வருகிறது. இது மனக்கலக்கம், மனதின் பாரம். ஆனால் ஆண்டவர் எனக்கு உதவி செய்தபொழுது என்னுடைய விண்ணப்பங்களின் சத்தத்திற்கு செவி சாய்த்த பொழுது நான் விடுவிக்கப்பட்டதை உணர்ந்தேன்.

கர்த்தர் என்னை கைவிடவில்லை. ஆபத்திலே அவர் என்னோடுகூட இருந்து என்னை தப்புவித்து அவர் என்னை அவருடைய சட்டைகளின் நிழலிலே வைத்துக் காத்துகொண்டார். என் துக்கத்தை மாற்றினார். என் கண்ணீரை துடைத்தார். எனக்கு ஜெயத்தைக் கொடுத்தார். நம்பிக்கையிலே உறுதியிலே நிலைத்திருக்கக் கிருபை பாராட்டினார். அந்த தேவனுக்கு ஸ்தோத்திரம் என்று தாவீது சொல்கிறதை நாம் பார்க்கிறோம். ஆம் ஆண்டவரே! இதே போன்று சஞ்சலத்தோடு துக்கத்தோடு கடந்து போகிற மக்களுக்காக நாங்கள் ஜெபிக்கிறோம். நீரே உம்முடைய பிள்ளைகளுக்கு உறுதியான மனநிலையைத் தாரும். நம்பிக்கையிலே சறுக்கி விழாமல் இருக்க கிருபை செய்வீராக. விசுவாசத்திலே சோர்ந்து போகாமல் இருக்க கிருபை செய்வீராக.

உலகத்திலே இருக்கிற பொல்லாதவர்களுக்கு முன்பாக நீர் பலசாலியாய், சர்வ வல்லமையுள்ள தேவனாய் எழும்பி உம்முடைய பிள்ளைகளுக்காக நீதி செய்து நியாயம் செய்து நீர் அவர்களை தேற்றுகிறபொழுது திடப்படுத்துகிற பொழுது உம்முடைய நாமம் தரித்திரிக்கபட்டிருக்கிறதான பிள்ளைகள் சந்தோஷப்படுவார்கள். கர்த்தர் அவ்விதமான கிருபைகளை கட்டளையிடுவார். கர்த்தர் அற்புதங்களை செய்து அடையாளங்களை செய்து ஆசிர்வதித்து காத்துக்கொள்வார். உம்முடைய நன்மைகள் பிள்ளைகளுக்கு போதுமானதாக இருப்பதாக. நீரே பெரிய காரியங்களை செய்யும் ஏசு கிறிஸ்து மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென். ஆமென்.

ஆசிரியர்: போதகர் தேவசகாயம்

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com