நீதிமான்
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. இந்நாளின் ஜெபத்தை தாவீதுனுடைய அனுபவத்திலிருந்து நாம் பெற்றுகொள்ள இருக்கிறோம். ஒன்று சாமுவேல் இருபத்திநான்காம் அதிகாரம் பன்னிரண்டாம் வசனத்திலே கர்த்தர் எமக்கும் உமக்கும் நடுநின்று நியாயம் விசாரித்து கர்த்தர்தாமே என் காரியத்திற்கு நீதியை சரிகட்டுவாராக.
உம்முடைய பேரில் நான் கைபோடுவதில்லை. இது தாவீதுனுடைய ஜெபம். சவுலுக்கு முன்பாக தாவீது இந்த காரியத்தை சொல்கிறான். சவுல் ராஜா தாவீதை பகைத்து அவனை எதிராளியாக நினைத்து அவனை கொன்றுபோடுவதற்காக அவனை தேடி சுற்றி திரிந்துகொண்டிருக்கிறான். இப்பொழுது எங்கேது என்று சொல்லப்படுகிற ஒரு பகுதியிலே தாவீது ஒளிந்து கொண்டிருக்கிறான் என்கிற செய்தியை கேட்டு சவுல் ராஜா தன்னுடைய படை வீரர்களோடு கூட அவனை தேடி வருகின்றார்கள். அவர்கள் அங்கே தேடி விரைந்து வருகிற காலக்கட்டத்திலே தாவீதுனுடைய ஆட்கள் எல்லாரும் ஒரு கெபியை சுற்றிலும் மறைந்திருக்கிறார்கள். ஆனால் சவுல் அந்த கெபிக்குள்ளாக நுழைந்து நலதுஅலாதி இருப்பதற்காக போகிறான். படைவீரர்கள் எல்லாரும் தூரத்திலே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
தாவீதுனுடைய ஆட்கள் தாவீதினிடத்திலே சொல்கிறார்கள். உம்முடைய சத்ருவை கர்த்தர் என்றும் உம்முடைய கைகளிலே ஒப்புகொடுப்பார். அந்த நாள் இந்நாளே என்று சொல்கிறபோது, கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்பட்டவரின் மேல் எம்முடைய கையை நான் போடுவதில்லை என்று சொல்லி அவனை தடுத்துவிடுகிறான். ஆனால் தாவீது கெபிக்குள்ளாக சென்று சவுலினுடைய வஸ்திரத்தை தொங்கலை அறுத்து கொண்டு வெளியே வந்துவிடுகிறான். சவுல் வெளியே வந்தவுடன் அவனுக்கு முன்பாக சென்று முகங்குப்புற விழுந்து வணங்கி அவனை வாழ்த்துகிறான். சவுல் ராஜாவினிடத்திலே சொல்கிறான், “கர்த்தர் எமக்கும் உமக்கும் நடுநின்று என்னுடைய காரியத்தை விசாரித்து நீதி செய்வாராக!. நான் துணிகரங்கொண்டு அபிஷேகம் பண்ணப்பட்ட ராஜாவாகிய சவுலை நான் கொல்லுவதில்லை. ஆனால் நீதி செய்கிற தேவன் எனக்கு நீதி செய்யட்டும்” என்று சொல்லி அங்கே தன்னை தன்னுடைய பொறுமையை நிதானத்தை தாழ்மையை காட்டுகிறான்.
கர்த்தர் அவனை ஆசிர்வதிக்கிறார். கிருபையுள்ள ஆண்டவரே! நாங்கள் உம்மை ஸ்தோத்திக்கிறோம். எதிராளிகள் சத்ருக்கள் எங்களுடைய கைகளிலே அகப்பட்டுகொண்டார்கள் என்று சொல்லி நாங்கள் அவர்களை இம்சிக்காதபடி அவர்களை கொள்ளையிடவோ கொலை செய்யவோ நாங்கள் துணிந்து செல்லாமல் எங்களுக்கு பொறுமையை தாரும் தாழ்மையை தாரும். விட்டுகொடுக்கிற சுபாவத்தை தாரும். வீணான ரத்த பலிகளுக்கு எங்களை ஆளாக்காதபடி எங்களை காத்துகொள்வீராக.
கர்த்தர் எங்களுக்குள்ளாக ஒரு நல்ல உள்ளத்தை தாரும். பகைவர்களை எதிராளிகளை நேசிக்கிற சுபாவத்தை தாரும். தாவீதை போன்று நல்ல சுபாவங்களை எங்களுக்கு நீர் கற்று கொடுப்பீராக. உம்முடைய கிருபை எங்களோடுகூட இருக்கட்டும். பெரிய காரியங்களை செய்யும். ஏசுவின் நாமத்தினால் பிதாவே. ஆமென். ஆமென்.
ஆசிரியர்: போதகர் தேவசகாயம்