நறுங்கொண்ட இதயம்
இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை தியானிக்க போகிறோம். சங்கீதம் முப்பத்தினான்கு பதினெட்டில் நறுங்கொண்ட இதயம் உள்ளவர்களுக்கு கர்த்தர் சமீபமாய் இருந்து நறுங்கொண்ட ஆயுள்ளவர்களை இரட்சிக்கிறார். இது தாவீதினுடைய ஒரு விசேஷமான ஒரு ஜெபமாக இருக்கிறது. நறுங்குண்ட இதயம் உள்ளவர்களுக்கு கர்த்தர் சமீபமாய் இருக்கிறார். நம்முடைய இருதயத்தை தாழ்த்தி நம்முடைய குற்றங்குறைகளை ஒத்துக்கொண்டு நம்முடைய பாவ கிரியைகளை அறிக்கையிட்டு, உத்தம மனஸ்தாபத்தோடு, மனபாரத்தோடு, கண்ணீரோடு கர்த்தரை நோக்கி நாம் கேட்டால் விண்ணப்பித்தால் கர்த்தர் நமக்கு சமீபமாக வருகிறார்.
நம்முடைய தாழ்மையைப் பார்த்து நம்முடைய சிறுமியை பார்த்து ஆண்டவருக்கு முன்பாக நாம் நம்முடைய அறிக்கை செய்கிற காரியங்களை பார்த்து, நமக்கு உதவி செய்யும்படியாக கர்த்தர் நமக்கு சமீபமாக வந்து அவைகளை உற்று கேட்டு கவனித்து விடுதலை கொடுக்கிறார். நறுங்கொண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார். பெறுமையுள்ளவர்களுக்கு தேவனே எதிர்த்து நிற்கிறான். தாழ்வுள்ளவர்களுக்கோ கர்த்தர் கிருபையை அருளச்செய்கிறார். ஆவியிலே, நறுங்குண்டவர்கள் வேற்றுமையோடு கூட அல்ல, பெருமையோடு கூட அல்ல, ஆணவத்தோடு கூட அல்ல, அதிகாரத்தோடு கூட அல்ல தாழ்மையினாலே நம்முடைய ஆத்துமாவை ஆவியை கிருஸ்துவுக்கு முன்பாக நாம் தாழ்த்துகிற பொழுது ஆண்டவர் நமக்கு உதவி செய்கிறார்.
ஆவியில் எளிமையுள்ளவர்களை கர்த்தர் ஆசிர்வதிக்கிறார். அந்த கிருபையை தாவீது அனுபவித்தான் அதை நமக்கும் கற்றுக்கொடுக்கிறான். நாமும் நம்மை தாழ்த்துவோம். முதலாவதாக நாம் நம் குறைபாடுகளை அறிக்கைசெய்ய வேண்டும். பரிசுத்தமுள்ள ஆண்டவருக்கு முன்பாக, நீதியுள்ள ஆண்டவருக்கு முன்பாக நாம் குற்றவாளிகள் தவறை இழைத்தவர்கள் தண்டனைக்குறியவர்கள் என்று சொல்லி நாம் அறிக்கையிட்டு, என்னை மன்னியும்! என்னை இரட்சியும்! எனக்கு உதவி செய்யும்! என்னுடைய எல்லாப் பிரச்சனைகளில் இருந்து எனக்கு விடுதலை தாரும்! என்று சொல்லி நாம் வேண்டிக்கொண்டால் கர்த்தர் நமக்கு உதவி செய்வார். அவர் உன்னை தள்ளிவிடமாட்டார் அவர் கிருபை நம்மை தாங்கும்.
இரக்கமுள்ள ஆண்டவரே! நாங்கள் உம்மை துதிக்கிறோம். உமக்கும் பாக்கியங்களை தாழ்த்துகிறோம். எங்களுடைய குற்றங்குறைகளை அறிக்கையிடுகிறோம். என்னுடைய பாவகிரியைகளைக் குறித்து விசாரப்படுகிறோம் கர்த்தாவே! ஆண்டவரே! நீர் எங்களை மன்னிப்பீராக, இரக்கம் பாராட்டுவீராக, எங்களுடைய ஆவியிலே நாங்கள் ஒடுங்குகிறோம் கர்த்தாவே! நாங்கள் எவ்வளவு குறைபாடான மக்களாக இருக்கிறோம்.
ஆண்டவரே! பரிசுத்தமுள்ள ஆண்டவருக்கு முன்பாக எவ்வளவு உருக்கிகளை செய்து உம்மை துக்கப்படுத்தியிருக்கிறோம். எங்களை விசாரிப்பீராக. எங்களுக்கு இரக்கம்பாராட்டி எங்களை மன்னித்து எங்களை இரட்சிப்பீராக. நாங்கள் இழந்து போன சமாதானத்தை சந்தோசத்தை தந்து எங்களை சந்தோசப்படுத்தூவீராக. உம்முடைய கிருபை எங்களோடு கூட இருக்கட்டும். இது தொடர்பாக உங்களை மன்றாடி வேண்டிக்கொள்கிற ஒவ்வொரு பிள்ளைகளுக்கு வேண்டிய ஆசிர்வாதங்களைத் தாரும். சமாதானத்தையும் சந்தோஷத்தையும் கர்த்தர் தம்முடைய பிள்ளைகளுக்கு நிறைவாய் கட்டளையிட்டு அவர்களை சந்தோசப்படுத்துவீராக. துதி கன மகிமை எல்லாவற்றையும் உங்களுக்கு ஏறெடுக்கிறோம். ஏசு கிருஸ்து மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென். ஆமென்.
ஆசிரியர்: போதகர் தேவசகாயம்