நம்பிக்கை
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. இன்றைய தியானத்தை தாவீது ஜெபிக்கிற ஜெபமாக அமைந்திருக்கிறது. ஒன்று சாமுவேல் பதினேழாம் அதிகாரம் முப்பத்தி ஏழிலே என்னை சிங்கத்தின் கைக்கும், கருடையின் கைக்கும் தப்புவித்த கர்த்தர் இந்த பெலிஸ்துவின் கைக்கும் தப்புவிப்பார் என்று சொல்லி தாவீது இதை ஒரு ஜெபமாக சொல்கிறான்.
சிங்கத்தின் கைக்கும், கருடையின் கைக்கும் தப்புவித்த கர்த்தர் இந்த பெலிஸ்துவினுடைய கைக்கும் என்னை தப்புவிப்பார் என்று சொல்லி இஸ்ரவேலின் முதல் ராஜாவாகிய சவுலின் இடத்திலே சொல்கிறதை நாம் பார்க்கிறோம். இந்த யுத்தம் உண்டானபோது, பெலிஸ்தியர் இஸ்ரவேல் ஜனங்களை மேற்கொள்ளும்படியாக கோலியாத்து என்று சொல்லப்படுகிற ஒரு நெடிய மனிதனை நம்பி அந்த யுத்தத்தை செய்ய முன்வந்து இருக்கிறார்கள். அவன் இஸ்ரவேலின் ஜனங்களையும் இஸ்ரவேலின் ஜனங்களினுடைய ஆண்டவரையும் அவன் நிந்தித்து, தூஷித்து பேசுகின்றான். அப்படிப்பட்ட சத்தத்தை தாவீது கேட்க நேரிடுகிறது.
ஈசாய் தன்னுடைய மகனாகிய தாவீதை யுத்தம் நடக்கிற இடத்திற்கு அனுப்பி, சவுல் ராஜாவுக்காக யுத்தம் செய்த அவனுடைய மூத்த மூன்று சகோதரர்களுடைய சுக செய்தியை கேட்டு வருவதற்காக அனுப்பிவைக்கப்பட்டவன். சகோதரர்களை பார்த்து கொண்டிருக்கிற வேளையிலே இந்த கோலியாத்து இஸ்ரவேல் ஜனங்களை நிந்திக்கிறான், தூஷிக்கிறான் அவமானமாக பேசுகிறான். இந்த சத்தத்தை கேட்டதான தாவீது ஆவியிலே பலன் கொண்டு வைராக்கியமாக இருதயத்திலே அவன் ஒரு திட மனத்தோடுகூட இந்த காரியத்தை பேசுகின்றான். அதை கேட்டவர்கள் சவுல் ராஜாவினுடைய இடத்திலே அவனை கொண்டுபோய் விடுகிறார்கள். நீ எப்படி ஜெய்க்கமுடியும் என்று சொல்லி, “நீ சிறுவனாயிற்றே! உன்னால் முடியாது” என்று சொல்கிறபோது தாவீதுனுடைய காரியத்தை சொல்கிறான். சிங்கத்தின் கைக்கும், கருடையின் கைக்கும் தப்புவித்த கர்த்தர் என்னை இந்த பெலிஸ்துவினுடைய கைக்கும் தப்புவிப்பார் என்று சொல்லி உறுதிபட சொல்கிறான்.
கர்த்தரை நம்புகிற பிள்ளைகளை ஆண்டவர் ஆசிர்வதிப்பார். கர்த்தருக்கும் அவருடைய பிள்ளைகளுக்கும் மகிமை சேர்க்க விரும்புகிறவர்களை கர்த்தர் இடத்து பயன்படுத்துவார். கர்த்தாவே! நாங்கள் உம்மை ஸ்தோத்திக்கிறோம். நாங்கள் உமக்கு பயப்படுகிறோம். உமக்கு கனத்தையும் மகிமையையும் ஏறெடுக்க விரும்புகிறோம். உம்முடைய நாமத்தை தரித்திருக்கிற உம்முடைய பிள்ளைகளுக்கும், ஆண்டவரே! நாங்கள் ஜெபிக்கிறோம். அவர்களையும் நீர் ஆசிர்வதிப்பீராக! நீர் எங்களை எடுத்து பயன்படுத்துவீராக! உம்முடைய கிருபையின் கரம் எங்களோடுகூட இருப்பதாக! பெரிய காரியங்களை செய்யும் ஏசுவின் நாமத்தினாலே பிதாவே. ஆமென். ஆமென்.
ஆசிரியர்: போதகர் தேவசகாயம்