சேனைகளின் கர்த்தர்
இன்றைய நாளில் எசேக்கியா ராஜாவின் ஜெபத்தை தியானிக்க போகிறோம். இரண்டு ராஜாக்கள் முப்பத்தி இரண்டாம் அதிகாரம் எட்டாவது வசனத்திலே அவனோடு இருக்கிறது மாம்ச பயம் நமக்கு துணை நின்று நம்முடைய யுத்தங்களை நடத்த நம்மோடு இருக்கிறவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர்தானே. எசேக்கியா ராஜா இந்த ஜெபத்தை ஏறெடுக்கிறார்.
அசரிய ராஜாவாகிய ஜனகரிப் பெரும் படையோடுகூட யூதாவின் ராஜாவிற்கு எதிராக வந்திருக்கிறான். அவர்கள் ஆலயம் அருகே இருக்கின்றார்கள். அந்த வேளையிலே எசேக்கியா ராஜா யூதா கோத்திரத்து மக்களை தைரியப்படுத்துகிறதை நாம் பார்க்கிறோம். எண்ணிக்கைக்கு அடங்காத பெரிய படையோடுகூட வந்திருக்கிறான். ஆனால் ஜனகரிப் ராஜா மாம்ச பலத்தோடு வந்திருக்கிறான். ஆனால் நம்மோடுகூட இருக்கிற கர்த்தர் அற்புதங்களை செய்கிற தேவன் நமக்காக யுத்தங்களை செய்கிறவர். நமக்காக நீதி செய்கிற தேவன் நம்மோடு கூட இருக்கிறார். அவர் சேனைகளின் கர்த்தர். சர்வ வல்லமையுள்ள தேவன். தம்முடைய நாமத்தை தரித்திரிக்கிற மக்களை எந்த தீய சக்திகளும் தொடாதபடி காத்துகொள்கிற வல்லமையுள்ள தேவன். அவர் கிருபை செய்வார். ஆகவே அந்த ஆண்டவரின் பேரிலே நாம் பற்றுதலாக இருப்போம். அவர் நமக்கு பெரிய இரட்சிப்பைக் கட்டளையிடுவார். எந்த சூழ்நிலைகளைக் கண்டும் நாம் மனம் பேதலித்து போகாதபடி சோர்வையடையாதபடி நம்பிக்கையோடுகூட நாம் கர்த்தருடைய சமூகத்திலே காத்திருப்போம். கர்த்தர் நமக்கு அற்புதங்களை செய்வார்.
கர்த்தருடைய பிள்ளைகளே! நம்முடைய வாழ்க்கையிலும் சத்ருக்கள், தீயவர்கள், பொல்லாதவர்கள், நமக்கு விரோதமான தீமையான சதித்திட்டங்களை கொண்டு வருவதற்கு முயற்சி செய்கிறபொழுது தாம் யாருடைய உதவியையும் தேடி செல்ல வேண்டியதில்லை. சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவரை நாம் தேடுவோம். அவருடைய கிருபைக்காக நாம் காத்திருப்போம். நம்முடைய பாரங்கள் எல்லாம் நாம் அவரிடத்திலே இறக்கி வைப்போம். கர்த்தர் நம்மை விடுவிப்பார். அவர் நமக்கு அற்புதங்களை செய்து அடையாளங்களை செய்து ஆசிர்வதிப்பார். தடைகள் எல்லாவற்றையும் அகற்றி போடுவார்.
இரக்கமுள்ள ஆண்டவரே! இந்த வேளையிலும் இந்த ஜெப தியானத்திலே பங்கு கொண்டிருக்கிற ஒவ்வொரு மக்களுக்கும் நீர் அருள் பாராட்டுவீராக! அவர்களை சுற்றிலும் இருக்கிற தடைகள், உபத்திரங்கள், சஞ்சலங்கள், வியாகுலங்கள், வியாதி எல்லாவற்றிலும் இருந்து அவர்களுக்கு விடுதலை தாரும். கர்த்தாவே! ஆபத்திலே சஞ்சலத்திலே உம்மை நோக்கி மன்றாடி வேண்டிகொள்கிற உம்முடைய பிள்ளைகளுடைய ஜெபத்திற்கு ஏற்ற பலனை தாரும். நீர் அவர்களுக்கு போதுமானவராக இருப்பீராக! நம்பிக்கையின் தேவனே உம்முடைய பிள்ளைகளுக்கு அருள் செய்வீராக! கிருபையினால் தாங்கும் ஏசு கிறிஸ்து மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென். ஆமென்.
ஆசிரியர்: போதகர் தேவசகாயம்