சுத்திகரிப்பவர்
இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். சங்கீதம் ஐம்பத்தியொன்று ஒன்றில், தேவனே! உமது கிருபையின்படி எமக்கு இரங்கும். உமது மிகுந்த இரக்கங்களின் படி என் நீடுதல் நீங்க என்னை சுத்திகரியும். இது தாவீதுனுடைய ஒரு பாவ அறிக்கையின் ஜெபத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. உமது மிகுந்த இரக்கங்களின்படி என் நீடுதல்கள் நீங்க என்னை சுத்திகரியும். ஆண்டவரிடத்திலே மன்றாடுகிறான்.
ஆண்டவரே! நான் உன் கற்பனைகளை மீறிவிட்டேன். உம்முடைய வார்த்தைகளை நான் செவிசாய்த்து நடக்கவில்லை. நான் துணிகரம் கொண்டிருக்கிறேன். இருதயத்திலே மேட்டுமை கொண்டு, பெருமை கொண்டு ஆண்டவரே உம்மை துக்கப்படுத்தி கொண்டிருக்கிறேன். என் நீடுதல்கள் நீங்க என்னை சுத்திகரிப்பீராக. என்னுடைய துர்க்கிரியைகளினாலே என் நீடுதல்களின் காரியங்களினாலே என்னுடைய ஆவி ஆத்மா சரீரத்தை நான் கரைப்படுத்திக்கொண்டேன். பாவக்கரையினால் என் ஆத்மா நிரம்பியிருக்கிறது. ஆண்டவரே! அதனால் எனக்கு சமாதானம் இல்லை. எனக்கு அமைதல் இல்லை. எனக்கு சந்தோஷம் இல்லை. உம்முடைய இரக்கத்தை கட்டளையிடுவீராக. உம்முடைய சமாதானத்தை நீர் தந்தருளுவீராக. நீர் என்னை சந்தோஷப்படுத்துவீராக. உம்முடைய மனதுருக்கமுள்ள வார்த்தைகள் என்னை பலப்படுத்தட்டும், திடப்படுத்தட்டும், என்னை சுத்திகரிக்கட்டும்.
இரக்கமுள்ள ஆண்டவரே! உம்முடைய கிருபைக்காக நான் கெஞ்சி நிற்கிறேன். நீடுதலின் மகனாகிய நான் உம்முடைய இரக்கங்களுக்காக மன்றாடுகிறேன். உம்முடைய கட்டளைகளையும், கற்பனைகளையும், ஆண்டவரே நாங்கள் அற்பமாக எண்ணி உம்மை துக்கப்படுத்தின படியினாலே நாங்கள் வேதனையோடுகூட உம்முடைய சமூகத்திலே அறிக்கையிடுகிறோம். மனஸ்தாபப்படுகிறோம். கரைப்படுத்தி கொண்டோம், பாவக்கரையினால் நிரம்பியிருக்கிற எங்களை உம்முடைய பரிசுத்தக் கரத்தினால் தொட்டு உம்முடைய இரத்தத்தினால் என்னை கழுவி என்னை சுத்திகரிப்பீராக, சுகப்படுத்துவீராக, ஆரோக்கியப்படுத்துவீராக, சமாதானப்படுத்துவீராக. இவ்வேளையிலும் உம்மை நோக்கி மன்றாடி வேண்டிக் கொண்டிருக்கிற எல்லா சகோதர, சகோதரிகளையும் நீர் ஆசிர்வதிப்பீராக. சமாதானத்தின் தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கு வேண்டிய இரக்கங்களை கட்டளையிடும், கிருபையினால் தாங்கும். ஏசு கிறிஸ்து மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென். ஆமென்.
ஆசிரியர்: போதகர் தேவசகாயம்