சிலுவையின் வார்த்தை 04:05 | என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்?

தொடருகிறது…

10. யோவான் 10:17 நான் ஜீவனை மறுபடியும் அடைந்து கொள்ளும் படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார்.

வ.30 நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்.

ஏசாயா 53:12 அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக் கொண்டதினமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன். பலவான்களை அவர் தமக்கு கொள்ளையாகப் பங்கிட்டுக் கொள்வார்.

பிதாவே பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக ஏசாயா தீர்க்கதரிசியின் மூலமாக என் பாடு மரணங்களைக் குறிப்பிட்டுப் பேசினீர். அநேகருடைய பாவத்தைத்தானே சுமந்து தீர்ப்பார் என்று முன் குறித்தீர். அக்கிரமக்காரர்களை மன்னிக்கும்படி பிதாவாகிய என்னிடம் கேட்பார் என்று சொன்னீரே. அதன்படியே பிதாவே இவர்களை மன்னியும் என்றும் தாங்கள் செய்கிறது இன்னது என்று அறியாதிருக்கிறார்களே என்று உம்மை வேண்டிக் கொண்டேன். அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன் என்றீர். ஆனால் ஒரு கள்ளனைத்தானே நீர் எனக்கு கொடுத்தீர். மற்ற கள்ளனை நான் இழந்து போனேனே. அதற்காகவா பிதாவே நீர் என்னைக் கைவிட்டீர்? பலவான்களை அவர் தமக்கு கொள்ளையாக பங்கிட்டுக் கொள்வீர் என்றீர். இந்த சிலுவையின் காட்சிகளைக் கண்ட ஒரு போர்ச் சேவகனையும் நான் என் பக்கமாக சேர்த்துக் கொள்ளவில்லையே. பிதாவே இதற்காகவா, நீர் என்னைக் கைவிட்டீர்?

என் ஜீவனை உம்மிடம் கொடுக்கிறதினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறீர் என்றும் பிதாவும் நானும் ஒன்றாயிருக்கிறோம் என்று உம்மைக் குறித்து நம்பிக்கையாயிருக்கிறேன்.

உம்முடைய வார்த்தையின்படி என் ஆத்துமாவை மரணத்திலூற்றி அக்கிரமக்காரரில் ஒருவனாக எண்ணப்படுகிறேன். என்னைத் தேற்ற பிதாவாகிய நீர் அருகில் இல்லையே. பிதாவே, ஏன் என்னை கைவிட்டீர்? நான் உம்முடைய வார்த்தையின்படி இந்த உலகத்திற்கு வந்து பரலோக ராஜ்யத்தைப் பற்றிய செய்திகளை ஜனங்களுக்கு அறிவித்தேன். உம்முடைய நாம மகிமைக்காக அநேக அற்புதங்களையும் அடையாளங் களையும் செய்தேன். மரித்த அநேகரை நீர் எனக்கு கொடுத்த வல்லமையினால் உயிர்பெறச் செய்தேன். உம்முடைய வார்த்தையின்படி நான் மரிக்கும்பொழுது நீர் ஏன் என்னைக் கைவிட்டீர்?

யோவான் 14:2 என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு. அப்படியில்லாதிருந்தால் நான் உங்களுக்குத் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்போகிறேன்.

வ.3 நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக் கொள்ளுவேன்.

வ.6 நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன். என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினடத்தில் வரான்.

நான் உமக்காக ஆயத்தம் பண்ணின ரட்சித்த பரிசுத்தவான்களையும், நீதிமான்களையும், ரத்த சாட்சிகளையும் பிதாவாகிய என் தேவனுடைய வீட்டிற்கு அழைத்து வருவேன் என்று சொன்னேன். அவர்கள் என் வருகையை எதிர்பார்த்து இருப்பார்களே! பிதாவே, இந்த வேளையில் நான் உம்மைக் காணமுடியவில்லை. உம்மிடத்தில் என் ஆறுதலைத்தேட முடியவில்லை. பிதாவே, ஏன் என்னைக் கைவிட்டீர்?

தொடரும்…
புத்தகம்: சிலுவையின் ஏழு வார்த்தைகளும் ஆசிர்வாதங்களும்.

படம்: By GoranH [வணிக பயன்பாட்டிற்கு இலவசம், பட உரிமையாளரை மேற்கோள் காட்ட வேண்டியதில்லை], via CC0 கிரியேடிவ் காமன்ஸ், பிக்சாபே.காம் வலைத்தளத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com