சிலுவையின் வார்த்தை 04:03 | என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்?
தொடருகிறது…
4. பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்ஜியம் வருவதாக, உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக என்று நான் தெரிந்துகொண்ட சீஷர்களுக்கு ஜெபம் செய்யக் கற்றுக் கொடுத்தேன். பிதாவாகிய உம்முடைய நாமத்தைப் பரிசுத்தப்படுத்தவும் மகிமைப்படுத்தவும், சீஷர்களுக்குப் போதித்தேனே. பிதாவாகிய நீர் விரும்பின ராஜ்யம் இந்த பூமியிலே மீண்டும் வருவதைத்தான் நானும் விரும்பினேன். கோடானகோடி தூதர்களால் மகிமைப்படுத்தப்படும் உம்முடைய சித்தமும் திட்டமும் இந்த பூமியிலேயும் செய்யப்படுவதற்காக நான் நீர் குறித்த பணிகளைச் செய்து கொண்டிருக்கிறேன். பிதாவே, ஏன் என்னைக் கைவிட்டீர்?
5. மத்தேயு 7:21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே, கர்த்தாவே, என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
பரலோகத்திலிருக்கிற உம்முடைய சித்தத்தையும், திட்டத்தையும் செய்யாமல், யேசுவாகிய என்னை நோக்கி; கர்த்தாவே, கர்த்தாவே, என்று கூப்பிடுகிறவன் உம்முடைய ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க முடியாது என்று நான் உம்மை மேன்மைப்படுத்தியிருக்கிறேனே. பிதாவே, என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்?
6. மத்தேயு 11:27 சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
யோவான் 3:35 பிதாவானவர் குமாரனில் அன்பாயிருந்து எல்லாவற்றையும் அவர் கையில் ஒப்புக் கொடுத்திருக்கிறார்.
யோவான் 16:15 பிதாவினுடையவைகள் யாவும் என்னுடையவைகள்.
பிதாவே, உலகத்தை நீர் படைத்த காலமுதல் நீர் என்மேல் அன்பாயிருக்கிறீர். பரலோகத்திலுள்ளவைகள், பூலோகத்திலுள்ளவைகள் எல்லாவற்றையும் என்னுடைய கையில் ஒப்புக் கொடுத்திருக்கிறீர். பிதாவே உம்முடைய நம்பிக்கைக்கு உரியவனாகத்தானே என்னைப் பார்த்து வருகிறீர். பிதாவே நீர் செய்கிறவைகள் எல்லாவற்றையும் குமாரனாகிய எனக்கு மறைத்ததில்லையே. (யோவான் 5:20) பிதாவே, ஏன் என்னைக் கைவிட்டீர்?
தொடரும்…
புத்தகம்: சிலுவையின் ஏழு வார்த்தைகளும் ஆசிர்வாதங்களும்.
படம்: By Geralt [வணிக பயன்பாட்டிற்கு இலவசம், பட உரிமையாளரை மேற்கோள் காட்ட வேண்டியதில்லை], via CC0 கிரியேடிவ் காமன்ஸ், பிக்சாபே.காம் வலைத்தளத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.