சிலுவையின் வார்த்தை 01:03 | பிதாவே இவர்களை மன்னியும்.
ஆன்மிகம் | சிலுவையின் வார்த்தை 01:03 | பிதாவே இவர்களை மன்னியும்.
3. பிலாத்து மன்னிக்கப்படுவாரா?
கருத்து வேறுபாடுகளோடு ஆட்சி செய்து வந்த ஏரோதுவும் பிலாத்துவும் இயேசுவைக் குற்றவாளியாக்கி அவரைச் சிலுவையில் அறைய ஒப்புக் கொடுப்பதற்காக நண்பர்களானார்கள். இவர்களுடைய குற்றங்கள், பாவங்கள் மன்னிக்கப்படுமா?
ரோமராயனைத் துதிபாடுவதற்காக அவனுடைய முகத்தை ரோமக் கொடியில் வரைந்து ரோமப் போர்ச்சேவகர்கள் மூலம் பரிசுத்த நகரமாகிய எருசலேமின் வீதிகளில் உலாவரச் செய்த பிலாத்துவின் விக்கிரக வழிபாடு மன்னிக்கப்படுமா? இதைக் குறித்து தன்னிடத்தில் பேச வந்த யூதர்களைக் கொலை செய்த பிலாத்து மன்னிக்கப்படுவானா? எருசலேமின் பண்டிகையில் கலந்து கொள்ளவந்த கலிலேயரைக் கொன்று குவித்த பிலாத்துவின் பாவங்களை இயேசு மன்னிப்பாரா?
மத்தேயு 27:19 அவன் நியாயாசனத்தில் உட்கார்ந்திருக்கையில், அவனுடைய மனைவி அவனிடத்தில் ஆள் அனுப்பி நீர் அந்த நீதிமானை ஒன்றும் செய்ய வேண்டாம்; அவர் நிமித்தம் இன்றைக்குச் சொப்பனத்தில் வெகுபாடுபட்டேன் என்று சொல்லச் சொன்னாள். தெய்வகுமாரனாயும் நீதிமானாயும் உலகத்தில் வந்த யேசுவுக்குவிரோதமாக ஒரு தீங்கும் செய்யாதிரும் என்று ராஜாத்தி சொன்ன வார்த்தையை அலட்சியம் பண்ணின பிலாத்துவை இயேசு மன்னிப்பாரா? தண்ணீரை அள்ளிக் கைகளைக் கழுவி இந்த நீதிமானுடைய ரத்தப் பழிக்கு நான் குற்றமற்றவன் நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என்று கொலைவெறி பிடித்தவர்களிடத்தில் ஒப்புவித்த பிலாத்துவே இயேசு உன்னை மன்னிப்பாரா?
தொடரும்…
புத்தகம்: சிலுவையின் ஏழு வார்த்தைகளும் ஆசிர்வாதங்களும். படம்: By Wendy Luby [வணிக பயன்பாட்டிற்கு இலவசம், பட உரிமையாளரை மேற்கோள் காட்ட வேண்டியதில்லை], via CC0 கிரியேடிவ் காமன்ஸ், பிக்சாபே.காம் வலைத்தளத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.