சிங்காசனம்
இந்த நாளின் தியான ஜெபத்தை தனாயா மூலமாக நாம் அறிய இருக்கிறோம். தனாயா தாவீதின் நாட்களில் பிராதான ஆசாரியனாக இருந்த ஏதாவின் குமாரன். அவன் லேகியனாக இருந்தபோதிலும் அவன் பராக்கிரமசாலியாக இருந்தான். தாவீதினிடத்திலே இருந்த முப்பதாயிரம் பராக்கிரமசாலிகளில் ஒருவனாக இந்த தனாயாவும் காணப்பட்டான்.
ஒன்று ராஜாக்கள் முதலாம் அதிகாரம் முப்பத்தேழாம் வசனத்திலே கர்த்தர் ராஜாவாகிய என் ஆண்டனோடு எப்படி இருந்தாரோ அப்படியே அவர் சாலமனோடும் இருந்து தாவீது ராஜாவாகிய என் ஆண்டவருடைய சிங்காசனத்தை பார்க்கிலும் அவருடைய சிங்காசனத்தை பெரிதாக்குவாராக! என்று அங்கே ஒரு விண்ணப்பத்தை ஏறெடுக்கிறான். அப்சோலோமின் சகோதரனாகிய அதோணிய தாவீது ராஜாவின் இடத்திலே தன்னை ஒரு ராஜாவாக நியமித்துகொள்வதற்காக பல திட்டங்களை தீட்டுகிறான். படைவீரர்களை சேர்த்துகொள்கிறான். ரதங்களையும் குதிரை வீரர்களையும் ஆயத்தப்படுத்துகிறான் எனுமாக தன்னை அபிஷேகம் பண்ணுவதற்காக அங்கே ஆசாரியனாகிய அபியெத்தாரையும், என் செரியாவின் குமாரனாகிய யோவாவையும், இஸ்ரேலிலே பிரபலமானவர்களையும் இந்த விருந்திற்கு அழைப்பிக்கிறான்.
இந்த செய்தியை தீர்க்கத்தரிசியாகிய நாத்தார் அறிந்து அங்கே ராஜாத்தியாகிய பெர்சேபாலுக்கு தெரிவிக்கின்றான். இதை உணர்ந்துகொண்டதான பெர்சேபால் உடனடியாக தானே தாவீது ராஜாவினிடத்திலே சென்று நடக்கப்போகிற சம்பவங்களை குறித்து பேசுகிறாள். தாவீதின் நாட்களிலே அங்கே ராஜாவாக சாலமேன் அபிஷேகம் பண்ணப்படாவிட்டால் அங்கே விபரீதங்கள் நடக்கும் என்று சொல்லுகிறாள். உடனடியாக தாவீது அங்கே தீர்க்கத்தரிசியாகிய நாத்தாரையும் அங்கே ஆசாரியனாகிய சாதோக்கையும் தனாயாவை அழைப்பித்து என்னுடைய ஸ்தானத்திலே சாலமனை ராஜாவாக அபிஷேகம் பண்ணி என்னுடைய சிம்மாசனத்திலே கொண்டு வந்து அமர்த்துங்களேன் என்று சொல்லுகிறான். அந்த வேளையிலே தான் தனாயா ராஜாவாகிய தாவீதுனுடைய சிங்காசனத்தை பார்க்கிலும் சாலமனுடைய சிங்காசனத்தை பெரிதாக்குவராக! என்று சொல்லி விண்ணப்பிக்கின்றான். இந்த ஜெபம் தாவீதுக்கு மகிழ்ச்சியையும் சாலமனுக்கு வாழ்த்துதலாக அமைந்தது.
கர்த்தாவே! இந்த ஜெபத்தை தியானிக்கிற எங்கள் ஒவ்வொருவருக்கும் வேண்டிய ஆசிர்வாதங்களைத் தாரும். பெரியவர்களுடைய தீர்மானங்களையும் அவர்களுடைய அங்கீகாரங்களையும் நாங்கள் அங்கீகரிக்க ஏற்றுக்கொள்ள உதவி செய்வீராக! கர்த்தாவே! உம்முடைய அபிஷேகம் எங்கள் ஒவ்வொருவர் மேலும் இருக்கட்டும். கர்த்தாவே நீர் எங்களுக்கு போதுமானவராய் இருப்பீராக! ஏசுவின் மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென். ஆமென்.
ஆசிரியர்: போதகர் தேவசகாயம்