கர்த்தரை தேடுங்கள்!

இன்றைய நாளிலே அசரியா தீர்க்கதரிசியின் ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். இரண்டு நாலகமம் பதினைந்தாம் அதிகாரம் இரண்டாம் வசனத்திலே, ஆசாவே! யூதாப் பெண்ணினம் கோத்திரங்களையும் சகல மனுஷரை கேளுங்கள், நீங்கள் கர்த்தரோடு இருந்தால் அவர் உங்களோடு இருப்பார். நீங்கள் அவரை தேடினால் உங்களுக்கு விடைபடுவார். அவரை விட்டீர்களானில் அவர் உங்களை விட்டுவிடுவார். இந்த வசனத்தை தீர்க்கதரிசியாகிய அசரியா அதை ஒரு ஆலோசனையாகவும் ஜெபமாகவும் நமக்கு கொடுத்து இருக்கிறதை நாம் பார்க்கிறோம். இந்த தீர்க்கதரிசி அங்கே பத்து இலட்சம் வீரர்களோடும் முந்நூறு ரதங்களோடும் யூதா ஜனங்களுக்கு எதிராக வந்த யுத்தோப்பிய படையினரை கர்த்தருடைய கிருபையினாலே ஜெயித்து வருகின்றார்கள்.

ஆசா ராஜாவும் இன்னுமாக யூதாப் பெண்ணினம் கோத்திர ஜனங்களும் கர்த்தருடைய கிருபையை உணர்ந்து வெற்றி பெற்றதை சந்தோஷத்தோடு அவர்கள் மிகுந்த கொள்ளைகளோடுகூட திரும்பி வந்துகொண்டு இருக்கிறார்கள். அந்த நேரத்திலே தீர்க்கதரிசியாகிய யோதேபின் குமாரனாகிய அசரியா இந்த ஜெபத்தை ஏறெடுக்கிறதை நாம் பார்க்கிறோம். கர்த்தரை தேடுகிறபொழுது ஆண்டவருடைய கிருபையை தாங்குகிறது எந்த யுத்தங்களாக இருந்தாலும் எந்த போராட்டங்களாக இருந்தாலும் எத்தனை இலட்சம் சத்ருக்கள் நமக்கு எதிராக வந்தாலும் ஆண்டவருடைய திருக்கரம் நமக்கு வல்லமையான மிதமான காரியங்களை செய்து கொடுக்கும்.

ஆண்டவர் நம்மை பலப்படுத்துவார். ஆகவே கர்த்தரை தேட வேண்டும். கர்த்தரோடுகூட இருக்க வேண்டும். அந்த நாட்களிலே ஆண்டவர் நமக்கு அனுகூலமான காரியங்களை நடப்பிப்பார். நாம் மாம்சிக பலத்தை நம்பி ஆண்டவரை தேடுகிறதை விட்டுவிட்டோமானால் அவர் நம்மை விட்டுவிடுவார். தேடுகிறபொழுது கூப்பிடகிறபொழுது உம்முடைய பாரங்களை ஆண்டவருடைய சமூகத்திலே இறக்கி வைக்கிறபொழுது கர்த்தர் கேட்டு எல்லா இன்னல்களுக்கும் உம்மை நீங்கலாக்கி இரட்சிக்க வல்லவராயிருக்கிறார். மகிமையுள்ள ஆண்டவர் நமக்கு பெரிய காரியங்களை செய்வாராக.

நம்முடைய வாழ்க்கையிலும் நம்முடைய குடும்பத்திலும் ஏற்படுகிற நெருக்கங்கள் கலக்கங்கள் சமயத்திலே ஆண்டவரை நோக்கி பார்ப்போம். அவருடைய கிருபையை பெறுவோம். கர்த்தர் நமக்கு உதவி செய்வார். இரக்கமுள்ள ஆண்டவரே! இன்றைய நாளில் எங்களை தாழ்த்தி உம்முடைய சமூகத்திலே ஒப்புக்கொடுக்கிறோம். உம்மை தேடுகிற சுபாவத்தை எங்களுக்கு தாரும். உம்முடைய சத்தத்தை கேட்கிற வாஞ்சைகளை எங்களுக்கு தாரும். ஆபத்தனாலும் நெருக்கங்களானாலும் கலக்கங்களானாலும் நாங்கள் சோர்ந்து போகாதபடிக்கு உம்மை தேடி உம்முடைய கிருபைகளை பெற்று கொள்ள நீர் எங்களுக்கு அருள் செய்வீராக. நீர் எங்களோடுகூட இருக்க வேண்டுமாக நாங்கள் ஜெபிக்கிறோம்.

கர்த்தாவே! இந்த வேளையிலும் இந்த ஜெபத்திலே பங்கு கொண்டிருக்கிற ஒவ்வொருவருக்கும் இரக்கம் பாராட்டுவீராக. நாங்கள் கடந்து வருகிற சூழ்நிலைகளெல்லாம் உமக்கு தெரியும். கர்த்தாவே! எல்லா போராட்டங்களில் இருந்தும் எல்லா உபத்திரங்களில் இருந்தும் பாவங்களில் இருந்தும் நீர் அவர்களை விடுவிப்பீராக. கண்ணீர் உள்ள ஜெபத்திற்கு பதில் கொடுத்து அவர்களை ஆசிர்வதித்து சந்தோஷப்படுத்துவீராக. சமாதானத்தின் தேவன் தன்னுடைய பிள்ளைகளுக்கு போதுமானவராக இருக்க வேண்டுமாக  ஜெபிக்கிறோம். ஏசு கிறிஸ்துவின் மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென். ஆமென்.

ஆசிரியர்: போதகர் தேவசகாயம்

 

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com