ஒத்தாசை
இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். சங்கீதம் இருபத்தி இரண்டு பத்தொன்பதில் ஆனாலும் கர்த்தாவே! நீர் எனக்கு தூரமாகதேயும் என் பலனே! எனக்கு சகாயம் பண்ண தீவிரித்து கொள்ளும், என்று தாவீது ஜெபிக்கிறதை நாம் பார்க்கிறோம்.
கர்த்தாவே! நீர் எமக்கு தூரமாகதேயும். உம்மை நோக்கி பார்க்கிற உம்முடைய சமூகத்திலே மன்றாடி ஜெபித்து வருகிற உம்முடைய அடியானுடைய சத்தத்திற்கு நீர் செவி சாய்ப்பீராக. நீர் கேளாதவர் போல் இருந்துவிடாதேயும். ஆண்டவரே! என்னை விட்டு தூரமாய் போய் விடாதிரும். என்னுடைய ஜெபத்திற்கு பதில் கொடுக்க அருகாமையிலே நீர் வருவீராக. உம்முடைய பிரசாரத்தினால் நீர் என்னை தேற்றுவீராக.
உம்முடைய காட்சி தரிசனங்களால் என்னுடைய வாழ்க்கையிலே நீர் பெரிய இரட்சிப்பை கட்டளையிட்டு என்னை ஆசிர்வதிக்க வேண்டும் என்று சொல்லி மன்றாடுகிறான். என் பலனே எனக்கு சகாயம் பண்ண தீவிரித்து கொள்ளும். எனக்கு நீர் உதவி செய்ய வேண்டும். உம்முடைய நன்மைகளை தர வேண்டும். ஆபத்திலே அனுகூலமான காரியங்களை கட்டளையிட்டு என்னை ஆதரிக்க வேண்டும். ஆகவே நீர் என்னை தேடி தீவிரித்து வருவீராக. எனக்கு பக்கமாக வருவீராக. எனக்கு உதவி செய்வீராக. ஒத்தாசை செய்வீராக.
உம்முடைய வல்ல கரத்தினால் அரவணைத்து கொள்வீராக. கிருபை என்னை தாங்கட்டும். இவ்விதமான ஜெபத்திலே ஈடுபாடு கொண்டிருக்கிற ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் நீர் அருள் பாராட்டுவீராக. கிருபைகளை தாரும் ஆண்டவரே. சோர்ந்து போகாதபடி திடனற்று போகாதபடி அவர்களுக்கு நம்பிக்கையை கொடுப்பீராக. விசுவாசத்திலே வளர நீர் அருள் செய்வீராக. கர்த்தருடைய பிரசன்னம் கர்த்தருடைய ஆளுகை எப்போதும் பிள்ளைகளோடுகூட இருக்கட்டும். உம்மை நோக்கி விண்ணப்பங்களை ஏறெடுக்கிற தம்முடைய பிள்ளைகளுக்கு கிருபைகளை கட்டளையிட்டு அவர்களை ஆசிர்வதித்து சந்தோஷப்படுத்துவீராக. ஏசு கிறிஸ்து மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென். ஆமென்.
ஆசிரியர்: போதகர் தேவசகாயம்