இரத்தம்

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. இந்நாளின் ஜெபத்தை தாவீது சொல்லியதாக நாம் பார்க்கிறோம். இரண்டு சாமுவேல் இருபத்தி மூன்றாம் அதிகாரம் பதினேழாவது வசனத்திலே கர்த்தாவே தங்களுடைய பிராணனை எண்ணாமல் போய் வந்த அந்த மனுஷரின் இரத்தத்தை குடிக்கும் செயல் தூரமாய் இருப்பதாக! தாவீது இதை ஒரு ஜெபமாக சொல்கிறான்.

பெலிஸ்தியர்கள் எல்லாரும் ஒன்றுகூடி பெத்லகேமுக்கு அருகாமையால் நடக்கையிலே ரெபாயிம் என்று சொல்லப்படுகிற பள்ளத்தாக்கிலே யுத்தத்திற்காக ஒன்றுகூடி வந்திருக்கிறார்கள். அவர்கள் பெத்லகேமை சுற்றி சூழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது தாவீது பிறந்த வளர்ந்த இடம். அந்த பட்டணத்திலே ஒரு ஒளிமிகு வாசல் ஒன்று, ஒளிமிகு வாசலுக்கு அருகாமையிலே ஒரு கிணறு இருக்கிறது. அந்த கிணற்றின் தண்ணீரை தாவீது குடிக்கும்படியாக விரும்புகிறான். ஆனால் யுத்த வீரர்கள் அங்கே எதிரிகளுடைய படைகளெல்லாம் அங்கே சூழ்ந்து கொண்டிருக்கிறது. அவர்களுடைய முகாமுக்குள்ளாக புகுந்து ஒளிமிகு வாசலிலே சென்று தண்ணீரை எடுத்து கொண்டுவந்து தாவீதுக்கு கொடுப்பது என்பது மிக கடினமான காரியம். ஆனால் தாவீது அதை ஒரு சவாலாக சொல்கிறான். அதன்பேரிலே எனக்கு வாஞ்சை! என்று சொல்லி வீரர்களிடத்திலே சொல்கிறான். வீரர்களும் தாவீதுனுடைய தாகத்தையும், ஏக்கத்தையும் தீர்க்கும்படியாக துணிகரம் கொண்டு துணிவு கொண்டு அவர்கள் கடந்து சென்று தண்ணீரை கொண்டு வருகிறார்கள்.

ஒரு ராஜா இவ்வளவு பெரிய காரியத்தை சவாலாக சொல்கிறான் அதை வீரர்கள் துணிந்து செய்து அந்த காரியங்களை செய்து முடிக்கிறார்கள். தாவீது அந்த தண்ணீரை கண்டு கையிலே எடுத்து கொண்டு இது குடிக்க கூடியது அல்ல. இது இந்த வீரர்களுடைய இரத்தம்! இது இரத்தம்! என்று சொல்லி ஒதுக்கிவிடுகிறான். தங்கள் பிராணனை எண்ணாமல் போய் வந்த அந்த மனுஷரின் இரத்தத்தை குடிக்கும் செயல் தூரமாய் இருப்பதாக!

பலவான்கள், தைரியவான்கள், ராஜாவுக்கு என்றும், கர்த்தருக்கு என்றும் மிகப்பெரிய காரியங்களை செய்கிறவர்களை நாம் கணம் பண்ணுவோம். அவர்களை ஆதரிப்போம். அவர்களை நாம் எக்காலத்திலும் நினைவு கொள்ளுவோம். கர்த்தர் உமக்கு உதவி செய்வாராக! இரக்கமுள்ள ஆண்டவரே! எங்களுக்கு இரக்கம் பாராட்டும். எம்முடைய ஆசைகள் எம்முடைய வாஞ்சைகள் சில நேரங்களிலே தவறாக இருக்கும். அதை நீர் மன்னிப்பீராக!

எங்களோடுகூட இருந்து எங்களுக்கு உதவி செய்கிறவர்களை நாங்கள் கனம் பண்ண வேண்டும் மதிக்க வேண்டும். அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் இந்த பாடத்தை எங்களுக்கு கற்றுதாரும். உம்முடைய தயவுள்ள கரம் எங்களோடுகூட இருப்பதாக! பெரிய காரியங்களை செய்யும் ஏசுவின் நாமத்தினாலே பிதாவே. ஆமென். ஆமென்.

ஆசிரியர்: போதகர் தேவசகாயம்

 

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com