இரக்கம் பாராட்டும்!
இன்றைய நாளில் தாவீதின் இன்னொரு ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். சங்கீதங்களின் புஸ்தகம் ஒன்று இரண்டிலே கர்த்தாவே! எதுவரைக்கும் எங்களை மறந்து இருப்பீர். எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர் என்று சங்கீதக்காரன் தன்னுடைய வேண்டுதலை ஆண்டவருடைய சமூகத்திலே வைக்கிறான். என்னை மறந்துவிட்டீரோ? என்று சொல்லி அங்கலாய்க்கிறான்.
எவ்வளவு காலம் நீர் என்னை மறந்து இருப்பீர். என்னுடைய ஜெபம் உம்முடைய சமூகத்தை வந்து எட்டவில்லையா? என்னுடைய விண்ணப்பங்களுக்கு பதில் இல்லையே நீர் மறைந்து இருக்கிறீரோ என்று சொல்லி அவன் அங்கலாய்க்கிறான். எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர். உம்மை தரிசிக்க வேண்டும் உம்மை ஆராதிக்க வேண்டும். உம்மை தொழுது ஸ்தோத்திரிக்க வேண்டும் என்று சொல்லி வஞ்சிக்கிற அடியேனுக்கு உம்முடைய முகத்தை நீர் மறைத்துகொண்டு இருக்கிறீரே.
இரக்கம் பாராட்டும் கிருபை செய்யும் என்று சொல்லி அவன் மன்றாடுகிறதை நாம் பார்க்கிறோம். கர்த்தருடைய பிள்ளைகளே! நாமும் தினமும் ஆண்டவரை நோக்கிப் பார்ப்போம். அவருடைய முகப்பிரகாசத்தை பெற்று கொள்வதற்காக நாம் வாஞ்சிப்போம். கர்த்தரை நோக்கி ஜெபித்து மன்றாடி நம்முடைய வேண்டுதலுக்கு பதிலைப் பெற்று நாம் சந்தோஷப்பட கர்த்தருடைய கிருபையை தேடுவோம். இந்த ஜெபத்தை தியானிக்கிற ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் நீர் இரக்கம் பாராட்டும்.
நீர் அவர்களுக்கு தூரமானவர்களாக அல்லாமல் அவர்கள் கூப்பிடுகிறபொழுதே அவர்களுக்கு பதில் கொடுப்பீராக. அவர்கள் வேண்டிக்கொள்கிறபொழுதே முகப்பிரகாசத்தை அவர்களுக்கு கொடுத்து சந்தோஷப்படுத்துவீராக. துக்கங்கள், கவலைகள், கண்ணீர்கள் எல்லாம் மாற்றி அவர்களை தேற்ற சந்தோஷம் சமாதானத்தை ‘கொடுத்து அவர்களை ஆசிர்வதிப்பீர்களாக. உம்முடைய கிருபை அவர்களுக்கு போதுமானதாக இருக்கட்டும். ஏசு கிறிஸ்து மூலம் ஜெபிக்கறோம் ஜுவனுள்ள நல்ல பிதாவே. ஆமென். ஆமென்.
ஆசிரியர்: போதகர் தேவசகாயம்