அருள்
இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். சங்கீதங்களின் புஸ்தகம் பன்னிரெண்டு ஒன்றிலே இரட்சியும் கர்த்தாவே! பக்தியுள்ளவன் அற்றுபோகிறான் உண்மையுள்ளவர்கள் அனுஉத்தரவில் குறைந்து போகிறார்கள். பக்தியுள்ளவர்கள் அற்றபோகிறார்கள். உண்மையுள்ளவர்கள் குறைந்து இருக்கிறார்கள்.
மனிதன் பொய் பேசி பித்தலாட்டம் பண்ணி வஞ்சகம் செய்து பரிகாசம் பண்ணி மற்றவர்களை துக்கப்படுத்துகிற சுபாவம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். தேவ பயமோ பக்தியோ குறைந்துகொண்டே இருக்கிறது. கர்த்தருக்கு பயப்படுகிற பயம் மனிதர்களுக்கு இல்லை. உண்மையுள்ளவர்கள் இல்லை. உண்மையை பேச அநேகர் அஞ்சுகிறார்கள். ஆனால் பொய்யும் பிரட்டும் மிக எளிதாக அவர்களுக்கு காணப்படுகிறது. அவ்விதமான சூழ்நிலைகளிலே வாழ்கிற மக்களுக்கு நீர் அதக்கம் பாராட்டுவீராக. நீதி கிடைக்கப் பண்ணுவீராக. அவர்களுக்கு சகல உதவிகளை நீர் அவர்களுக்கு கட்டளையிடுவீராக.
சமாதானத்தின் தேவன் அவருடைய பிள்ளைகளுக்கு நீர் போதுமானவராக இருப்பீராக. உண்மையுள்ளவைகளையும் ஒழுக்கமுடையவைகளையும் நீதியுள்ளவகைகளையும் கற்புள்ளவர்களையும் உண்மைகளையும் புகழ்ச்சிகளையும் பேசி கர்த்தருடைய நாமத்தை மகிமைப்படுத்த எங்கள் ஒவ்வொருவருக்கும் நீர் அருள் செய்ய வேண்டுமாய் நாங்கள் ஜெபிக்கிறோம்.
இரக்கமுள்ள ஆண்டவரே! நாங்கள் ஜுவனுள்ள ஆண்டவருக்கு முன்பாக நாங்கள் பக்தியுடையவர்களாகவும் உண்மையுடையவர்களாகயும் நீதியையும் நியாயத்தையும் செயல்படுத்துகிறவர்களாகயும் நாங்கள் காணப்பட வேண்டும் கர்த்தாவே! நீர் எங்களுக்கு அருள் செய்வீராக. இந்த கிருபையின் வரங்களை தந்தருளுவீராக. நீர் எங்களுக்கு போதுமானவராக இருப்பீராக. இந்த ஜெபத்தை தியானிக்கிற ஒவ்வொருவருக்கும் வேண்டிய உதவிகளைத் தாரும். கிருபையுள்ள கர்த்தர் தம்முடைய பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் போதுமானவராக இருப்பீராக. ஏசுவின் மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென். ஆமென்.
ஆசிரியர்: போதகர் தேவசகாயம்