அநீதி

இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை தியானிக்க போகிறோம்.  சங்கீதம் முப்பத்தைந்து இருபத்து மூன்று மற்றும் இருபத்துநாளில், என் தேவனே! என் ஆண்டவரே எனக்கு நியாயம் செய்யவும் என் வழக்கை தீர்க்கவும் விழித்துக்கொண்டு எழுந்தருளும்.  என் தேவனாகிய கர்த்தாவே உம்முடைய நீதியின் படி என்னை நீ நியாயம் விசாரியும் என்னை குறித்து அவர்களை மகிழவுட்டாதேரும்.  தாவீது இன்னொரு ஜெபத்தை ஏறெடுக்கிறதை நாம் பார்க்கயிருக்கிறோம்.  எனக்கு நியாயம் செய்யும்படிக்கு என் வழக்கை தீர்க்கும்படியாக நீர் விழித்துக்கொள்ளும்.  நீர் நீதியின் தேவன், நீர் உண்மையின் தேவன்.

ஆண்டவரே! உலகமோ உலகத்து மக்களும் பொல்லாதவர்களாக இருக்கிறார்கள்.  அநீதியையும் அக்கிரமத்தையும் நடப்பித்து மக்களை துக்கப்படுத்துபவர்களாக காணப்படுகிறார்கள்.  எல்லாவற்றையும் அவர்கள் தலைகீழாக மாற்றிப்போட்டு அவர்கள் நீதியை அவமானப்படுத்துகிறவர்களாக காணப்படுகிறார்கள்.  ஆனால், உம்முடைய நாமத்தை தரித்திருக்கிற, அடியேனுக்கு நீர் இரக்கம் செய்கிற நீர் விழித்துக்கொள்ளும்.  நீர் எனக்காக மனதிரங்கும்.  நீர் இதை கேட்டு எல்லாருடைய கிரிதைகளிலிருந்து எனக்கு விடுதலை தாரும்.  அவர்களுடைய எல்லா ஆக்ரோஷமான காரியங்களையும் நீர் மாற்றிப் போடுவீராக.  தடையான காரியங்களை நீர் தகர்த்தப்படுவீராக.

கர்த்தாவே! உம்முடைய நீதியின் படி என்னை நியாயம் விசாரியும்.  நீர் உண்மையுள்ள தேவன், உத்தமமான தேவன்.  பரிசுத்தமுள்ள ஆண்டவர். கர்த்தாவே! நீர் மாறாத தேவன் கர்த்தாவே. அவனவனோடு கிரிதைகளுக்கேற்ற பலன் என்னோடு கூட வருகிறது என்று சொன்ன ஆண்டவர் தம்முடைய மெய்யான நீதியையும் நியாயத்தையும் ஏற்ற வழியில் செய்ய வல்லவர்.  அந்த நீதியை எனக்கு நடப்பிப்பீராக.  என்னுடைய உண்மை உனக்கு தெரியும்.  என்னுடைய இருதயத்தினுடைய சுத்தம் உமக்கு தெரியும்.  என் கையின் கிரிதைகள் உனக்கு தெரியும்.  என் வாயின் வார்த்தைகளை நீர் கேட்டிருக்கிறீர்.

கர்த்தாவே! உம்முடைய நீதியின்படி என்னை நீ நியாயம் விசாரிப்பீராக.  உம்முடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாக அந்த நீதியை நியாத்தை எனக்கு நிலைநிறுத்தி எனக்கு ஆசிர்வதிப்பீராக.  கர்த்தாவே! சத்துருக்கள் என்னை பார்த்து அவர்கள் வெட்கப்பட்டு போக பண்ணுவீராக அவர்களை துக்கப்படுத்தி விசனப்படுத்தி அனுப்புவீராக.  உம்முடைய கோட்டையும், அரணும் அடியனோடு கூட இருப்பதாக.  இரக்கமுள்ள ஆண்டவரே! உம்மை நோக்கி பார்க்கிறோம்.  தாழ்மையுள்ளவர்களுக்கு இரக்கம் பாராட்டுவீராக.  நீதி நியாயத்திற்காக உம்மை நோக்கி மன்றாடுகிற மக்களின் ஜெபத்தை கேட்டு அருளுவீராக.  அவர்கள் யாரிடத்திலே போவார்கள்.  யாரிடத்திலே உதவியை கேட்பார்கள்.  உண்மை மறைக்கப்படுகிறது.  நீதி மறுக்கப்படுகிறது.

தேவனே! திக்கற்வர்களுக்காக ஏழைகளுக்காக விழித்துக்கொள்ளும்.  உம்முடைய நீதியை நிலைநாட்டும்.  உம்முடைய பிள்ளைகளை நீர் ஆசிர்வதியும் நீர் அவர்களை சுற்றிலும் கோட்டையும் அரணுமாக இருந்து காத்துக்கொள்வீராக.  பெரிய இரட்சிப்பை, சந்தோஷத்தை, சமாதானத்தை கொடுத்து ஆசிர்வதிப்பீராக.  எங்கள் நன்மைகள் எல்லாவற்றையும் எங்கள் இரட்சகர் மீட்பருமாகிய ஏசு கிருஸ்துவின் மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென். ஆமென்.

ஆசிரியர்: போதகர் தேவசகாயம்

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com