சூரிய ஆற்றலில் பாலிமர் நிலை மாற்றப்பொருட்களின் பயன்பாடுகள்

சூரிய ஆற்றலைப்பற்றிய விழிப்புணர்வும் அதன் பயன்பாடும் சமீப காலமாக மக்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக சூரிய ஆற்றிலின் மீதான விஞ்ஞானிகளின் பார்வையும், அந்த தொழிநுட்பத்தின் மீது மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.  இந்நிலையில், நிலையான வெப்பநிலையை கணக்கிடவும், பராமரிக்கவும் MPPT, CPG மற்றும் PCM(Phase Change Material) நிலைமாற்றப்பொருட்கள்  உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.  இவற்றில், கணினியில் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துவதற்கு நிலை மாற்றப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டுவருகின்றது.  வெப்ப ஆற்றல் மாற்றத்தின் செயல்திறனை அதிகரிப்பதற்கும், பாலிமெரிக் படி நிலை மாற்ற கலவைகளை பயன்படுத்துவதற்கும் சூரிய ஆற்றல் முறை முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் இன்றியமையாத ஒரு அணுகுமுறையாக மாறி வருகிறது.  அதிக ஆற்றல் அடர்த்தி மற்றும் செயல்திறன் மிக்க ஆற்றல் வெளியீட்டு நிலைத்தன்மை போன்றவற்றின்  காரணமாக சமீப ஆண்டுகளில் இம்முறை பெரிய கவனத்தை ஈர்த்து உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நிலை மாற்றப் பொருளுக்கு அதிகப் படியான உருகுதல் உள்ளுறை வெப்பம் இருப்பதால் இது வெப்ப ஆற்றலைச் சேகரிக்க உதவுகிறது. இவற்றில், பாலிமர் நிலை மாற்றப் பொருட்கள் ஆற்றல் சேமிப்பு சாதனங்கள், வெப்பநிலை கட்டுப்படுத்தப்பட்ட மருத்து பெட்டிகள்(சில மருத்துகள் குறிப்பிட்ட வெப்பநிலையில் இருந்தால் மட்டுமே பயன்படுத்த முடியும் அது போன்ற இடங்களில்) போன்ற பல்வேறு துறைகளில் அதிகமாக பயன்பாட்டில் உள்ளன. இது போன்ற பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படும் பாலிமர் நிலை மாற்றப்பொருட்களை கொண்டு ஏராளமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு மதிப்புரைகள் மற்றும் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. சமீபத்தில், G. Jegan, et. al., (2022) அவர்களின் ஆய்வறிக்கையில், ‘’சூரிய ஆற்றல் அமைப்பின் பயன்பாட்டுடன் கட்டுப்படுத்தப்பட்ட நானோ நிலை மாற்றப் பொருளின் முன்னேற்றம்’’  பற்றிய ஆய்வுக்கட்டுரை வெளியிடப்பட்டள்ளது.

 

References:

  • Jegan, G., Ramani, P., Nagalakshmi, T. J., Chitra, S., & Lawrence, T. S. (2022). A Novel Approach on the Advancement in Polymer Phase Change Material in Solar Energy. International Journal of Photoenergy2022.
  • Nagar, S., Sharma, K., Pandey, A. K., & Tyagi, V. V. (2022). Effect of graphene and its derivatives on thermo-mechanical properties of phase change materials and its applications: a comprehensive review. Frontiers in Energy, 1-37.
  •  Hassan, F., Jamil, F., Hussain, A., Ali, H. M., Janjua, M. M., Khushnood, S., & Li, C. (2022). Recent advancements in latent heat phase change materials and their applications for thermal energy storage and buildings: A state of the art review. Sustainable Energy Technologies and Assessments49, 101646.
  • Yu, C., Park, J., Youn, J. R., & Song, Y. S. (2022). Sustainable solar energy harvesting using phase change material (PCM) embedded pyroelectric system. Energy Conversion and Management253, 115145.
  •  Luo, J., Zou, D., Wang, Y., Wang, S., & Huang, L. (2022). Battery thermal management systems (BTMs) based on phase change material (PCM): A comprehensive review. Chemical Engineering Journal430, 132741.

 

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com